பிரதமர் அலுவலகம்

ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 211-வது பிறந்த நாளை முன்னிட்டு, மேற்கு வங்கத்தின் தாக்கூர்பாரி, ஸ்ரீதாம் தாக்கூர் நகரில் நடைபெற்ற மதுவா தர்ம மகா மேளா 2022-ல் பிரதமர் உரையாற்றினார்

Posted On: 29 MAR 2022 10:01PM by PIB Chennai

ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் 211-வது பிறந்த நாளையொட்டி, மேற்கு வங்கத்தின் தாக்கூர்பாரி, ஸ்ரீதாம் தாக்கூர் நகரில் நடைபெற்ற மதுவா தர்ம மகா மேளா 2022-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி, காணொலி வாயிலாக உரையாற்றினார்.

ஸ்ரீ ஸ்ரீ குருசந்த் தாக்கூருக்கும், கடந்த ஆண்டு ஒரகண்டியில் மதுவா பாரம்பரியத்திற்கும் எனது பணிவை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். தற்போது தாக்கூர்பாரி போன்ற யாத்திரை தலங்களில், தொழில்நுட்பம் வாயிலாக உங்களுடன் கலந்துரையாடி உங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. நான் ஒரகண்டிற்கு சென்ற போது, அங்கு என்மீது பேரன்பு காட்டப்பட்டதுடன், ஏராளமான ஆசிகளும் கிடைத்ததாக பிரதமர் கூறினார்.

மதுவா தர்மியோ மகா மேளா மற்றும் மதுவா பாரம்பரியத்திற்கு எனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு.  ஸ்ரீ ஹர்சந்த் தாக்கூர் தோற்றுவித்த நற்பண்புகளுக்கு எனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவும் இது நல்ல வாய்ப்பாகும். இந்த நற்பண்புகள் குருசந்த் தாக்கூர் மற்றும் அன்னை போரோ-வால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்றார். தற்போது சாந்தனுவின் ஒத்துழைப்பால் இந்த பாரம்பரியம் மேலும் செழித்தோங்கியுள்ளதுதலைசிறந்த பாரம்பரியத்திலிருந்து நமது நம்பிக்கையை அர்ப்பணித்ததன் வாயிலாக ஒற்றுமை, இந்தியத்தன்மை மற்றும் நவீனத்தை பின்பற்றும் பாடங்களை நாம் அறிந்துள்ளோம்ஆனால், தற்போது சுயநலனுக்காக ரத்தக்களறி ஏற்படுவதையும், சமுதாயத்தை பிளவுப்படுத்த முயற்சிப்பதையும், மொழி மற்றும் மதத்தின் பெயரால் பாகுபாடு காட்டும் போக்கை நாம் காணும் போது ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் வாழ்க்கை மற்றும் அவரது தத்துவம் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. எனவே இந்த விழா, ஒன்றுபட்ட பாரதம், வலிமையான பாரதம் என்ற பண்பை வலுப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நமது கலாச்சாரம், நமது நாகரீகம் தலைசிறந்தது என நாம் அடிக்கடி கூறி வருகிறோம். இது தொடர்ச்சியைக் கொண்டது, இது பொங்கி வழியக் கூடியது, இது தனக்குத் தானே அதிகாரமளித்துக் கொள்ளும் இயற்கைத் தன்மை கொண்டதாக இருப்பது மிகவும் சிறந்தது என்று பிரதமர் தெரிவித்தார். இது நதியைப் போன்றது, தனது பாதையை தானே வகுத்து, தானே பின்பற்றி எந்தத் தடை குறுக்கே வந்தாலும், அதனைக் கடந்து செல்லும் தன்மை கொண்டதாகும். உலகம் தற்போது பேசிவரும் பாலின முறையை ஹரிசந்த் தாக்கூர் 18-ம் நூற்றாண்டிலேயே ஒரு இயக்கமாக மேற்கொண்டுள்ளார். இது அவரது தொலைநோக்கு சிந்தனை என்ன, அவரது குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தை இந்தியா வெற்றிகரமானதாக மாற்றியுள்ள நிலையில், தூய்மை, ஆரோக்கியம்தாய்மார்கள் - சகோதரிகள்- புதல்விகளின் சுயமரியாதையை கவுரவிக்கும் போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுமிகள் அவர்களது திறமையை உணரும் வாய்ப்பு ஏற்படும் என்று பிரதமர் கூறினார். அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம் என்பது கொண்ட அரசுத் திட்டங்கள், நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் முயற்சிகள் வாயிலாக உள்ளார்ந்த சமுதாயத்தை நோக்கிச் செல்ல முடியும் என்று அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூரின் மற்றொரு செய்தி, சுதந்திரப் பெருவிழாவைக் கொண்டாடும் வேளையில் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கம் அளிப்பதாக அமையும்அவர் நமது கடமைகளை நாம் உணர்வதற்கும் வழி வகுத்துள்ளார். மேலும்,  குடும்பம் மற்றும் சமுதாயத்திற்கு ஒருவர் ஆற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்ற, எவ்வாறு முயற்சிக்க வேண்டும் என்பதையும் ஸ்ரீ ஸ்ரீ ஹரிசந்த் தாக்கூர் விவரித்துள்ளார். உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்பதை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும். தேசம் முதலில் என்ற கொள்கையை மாபெரும் கடமையாக மேற்கொள்ள வேண்டும், நாட்டைவிட மேலானது வேறு எதுவும் இல்லை. நமது ஒவ்வொரு பணியும் தேசம் முதலில் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும். எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்வதற்கு முன்பாக அது நமது நாட்டிற்கு பலன் அளிக்குமா என்பதை நாம் கண்டிப்பாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்..

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1811145

***************



(Release ID: 1812341) Visitor Counter : 167