பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

प्रविष्टि तिथि: 23 MAR 2022 9:20AM by PIB Chennai

டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். டாக்டர் லோகியாவிடமிருந்து லின்லித்கோ பிரபுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் டாக்டர் லோகியாவின் தந்தைக்கும், அவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து ஆகியவை பற்றி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட சில சுவையான தகவல்களை இந்நாளில் அவர் பகிர்ந்துள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர்களில் பிரதமர் கூறியிருப்பதாவது;

டாக்டர் ராம் மனோகர் லோகியாவை அவரது பிறந்தநாளில் நினைவுகூர்கிறேன். வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் முன்னணியில் இருந்துள்ள அவர், நமது விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். கொள்கை சார்ந்த அரசியல், அறிவுத்திறன் ஆகியவற்றுக்காக அவர் மிகவும் மதிக்கப்படுகிறார்.

டாக்டர் லோகியாவிடமிருந்து லின்லித்கோ பிரபுவுக்கு அனுப்பப்பட்ட கடிதம் மற்றும் டாக்டர் லோகியாவின் தந்தைக்கும், அவருக்கும் இடையேயான கடிதப் போக்குவரத்து ஆகியவை பற்றி வரலாற்றுப் பக்கங்களில் இருந்து சில சுவையான தகவல்கள்.

****


(रिलीज़ आईडी: 1808587) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada