சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

12 முதல் 14 வயது பிரிவினருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவது நாளை தொடங்குகிறது

Posted On: 15 MAR 2022 1:28PM by PIB Chennai

தேசிய தடுப்பூசி தினமான நாளை (16, மார்ச் 2022), 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து அரசு மையங்களிலும்  தொடங்குகிறது. இந்தப் பிரிவினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.  ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இ நிறுவனம் இதனை தயாரிக்கிறது.

ஆன்லைன் பதிவு மூலமோ அல்லது நேரில் சென்றோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.  அனைத்து மாநில யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் திரு ராஜேஷ் பூஷண் காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் இதனை அவர் தெரிவித்தார்.  

 12 வயதுக்கு மேற்பட்ட, 14 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு (2008,2009,2010 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்கள்) இந்த தடுப்பூசி வழங்கப்படுகிறது.  60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். அவர்களுக்கும் நாளை முதல் தடுப்பூசி போடப்படுகிறது.  ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டு 36 வாரங்கள் ஆனவர்களுக்கு இது வழங்கப்படுகிறது.  14 முதல் 18 வயது பிரிவினருக்கு கோவேக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.

 இன்றைய கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலர்கள் கலந்து கொண்டனர்.

***************


(Release ID: 1806148) Visitor Counter : 281