பிரதமர் அலுவலகம்
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் எஸ் எப் ரோட்ரிக்ஸ் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
04 MAR 2022 7:54PM by PIB Chennai
இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் எஸ் எப் ரோட்ரிக்ஸ் மறைவு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;
“ஜெனரல் எஸ் எப் ரோட்ரிக்ஸ் காலமானதை அறிந்து வேதனை அடைந்தேன். அவரது தனிச்சிறப்புமிக்க சேவை மற்றும் இந்தியாவை வலுவான நாடாக மாற்றுவதற்கான பங்களிப்பிற்காக நாடு அவருக்கு எப்போதும் கடமை பட்டுள்ளது. அவரது போர்திறன் தொடர்பான ஆழ்ந்த அறிவாற்றல் என்றும் மதிக்கத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.”
***************
(रिलीज़ आईडी: 1803187)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam