எரிசக்தி அமைச்சகம்
‘‘நிலையான வளர்ச்சிக்கான எரிசக்தி’’: மார்ச் 4ம் தேதி நடைபெறும் பட்ஜெட் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றுகிறார்
Posted On:
03 MAR 2022 9:26AM by PIB Chennai
மத்திய நிதிநிலை அறிக்கை 2022யின் அறிவிப்புகளை விரைவில் அமல்படுத்துவதற்காக, மத்திய அரசு, பல முக்கிய துறைகளில் தொடர் இணைய கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. பொதுத்துறை மற்றும் தனியார் துறை, கல்வித்துறை மற்றும் தொழில்துறை நிபுணர்கள் மூலம், வெவ்வேறு துறைகளின் கீழ் உள்ள பல முயற்சிகளை, அமல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுதான் இந்த கருத்தரங்கின் நோக்கம்.
இந்த கருத்தரங்கின் தொடர்ச்சியாக, மின்துறை , பெட்ரோலியத்துறை; புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி; நிலக்கரி; சுரங்கம்; வெளியுறவுத்துறை; சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய அமைச்சகங்கள் ‘நிலையான வளர்ச்சிக்கான எரிசக்தி’’ என்ற தலைப்பில் மார்ச் 4ம் தேதி காலை 10 மணிக்கு இணைய கருத்தரங்கை நடத்துகின்றன. இதில் நிதிநிலை அறிக்கையில் எரிசக்தி துறையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை திறம்பட அமல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் பெறப்படும்.
பருவநிலை மாற்றம் குறித்த சிஓபி -26 கருத்தரங்கில் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்த பஞ்சமிர்த யுக்திகளுக்கு ஏற்றபடி, கார்பன் வெளியேற்றம் குறித்த யுக்திகளை ஊக்குவிக்கும் இந்தியாவின் எரிசக்தி மாற்றத்துக்கு நிதிநிலை அறிக்கை 2022 ஆதரவு அளிக்கிறது. இந்த யுக்தி, இந்தியாவின் எரிசக்தி தேவையை நீண்ட காலத்துக்கு நிறைவேற்ற வழிவகுக்கும். இந்த பட்ஜெட் பல குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை எடுத்து கூறுகிறது.
படிம எரிபொருள் முற்றிலும் பயன்படுத்தாத கொள்கையை பின்பற்ற மின்சார வாகனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
சூரிய மின்சக்தி தகடுகள் உற்பத்தியை ஊக்குவிக்க கூடுதலாக ரூ.19,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்துக்கான சேமிப்பு கட்டமைப்பை உருவாக்குதல், உயிரி எரிவாயுவை ஊக்கவித்தல், வேளாண் மற்றும் பண்ணை காடுகள் திட்டம், சூரிய மின்சக்தி மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தி உற்பத்தியை அதிகரித்தல் போன்றவை குறித்து இணைய கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802496
*************
(Release ID: 1802702)
Visitor Counter : 212