பிரதமர் அலுவலகம்
பிரதமர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய, இந்துமத பிரதிநிதிகளை சந்தித்தார்
இக்கட்டான சூழ்நிலையில் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தங்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடுகள் செய்ததற்காகவும் பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்
நீங்கள் விருந்தினர்கள் அல்ல , உங்களது சொந்த இல்லங்களில் உள்ளீர்கள், இந்தியா உங்களுடைய வீடு: பிரதமர்
குடியுரிமை திருத்த சட்டத்திற்காக பிரதிநிதிகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். உலகின் பிரதமர் என்று அவரை குறிப்பிட்டனர்
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குரு க்ரந்த் சாகிப்பின் மூலப்படிவத்தை கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பற்றி அவர் கூறிய போது தங்கள் கண்களில் கண்ணீர் வந்ததாக பிரதிநிதிகள் கூறினார்கள்.
சீக்கியர்கள் மற்றும் இந்துக்களின் அனைத்து பிரச்சனைகள் மற்றும் சிரமங்களுக்கு தீர்வு காண தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
Posted On:
19 FEB 2022 2:43PM by PIB Chennai
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சீக்கிய, இந்து பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். சீக்கியர்கள் மற்றும் இந்துக்களை ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்ததற்காக பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
அப்போது அவர்களை வரவேற்ற பிரதமர், நீங்கள் விருந்தாளிகள்
அல்ல என்றும், சொந்த இல்லங்களிலேயே இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்தியா உங்களது வீடு என்றும் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்தின் அம்சங்கள் குறித்து விளக்கி பேசிய பிரதமர், இதனால் சீக்கிய, இந்து மதத்தினருக்கான பயன்கள் குறித்தும் தெரிவித்தார். அவர்களுக்கான ஆதரவு தொடரும் என்று தெரிவித்த பிரதமர், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தாம் சென்று வந்தது குறித்தும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
தங்களது சமுதாயத்தினரை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவி புரிந்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்த திரு. மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, உரிய நேரத்தில் தங்களுக்கு பிரதமர் ஆதரவாக இருந்ததாக குறிப்பிட்டார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குரு க்ரந்த் சாகிப்பின் மூலப்படிவத்தை கொண்டு வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பற்றி அவர் கூறிய போது, தங்கள் கண்களில் கண்ணீர் வந்ததாக பிரதிநிதிகள் கூறினார்கள்.
உலகில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் இந்தியாவுக்கான பிரதமர் மட்டுமல்ல, மோடி உலகிற்கே பிரதமர் என்று குறிப்பிட்டனர்.
***************
(Release ID: 1799637)
Visitor Counter : 254
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam