சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19: கட்டுக்கதைகளும் உண்மைகளும்

Posted On: 17 FEB 2022 3:02PM by PIB Chennai

கொவிட்-19 காரணமாக இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதாகவும், உண்மையான எண்ணிக்கை குறைவாகக் கணக்கிடப்பட்டுள்ள தாகவும் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது...

2021 நவம்பரின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி 0.46 மில்லியன் (4.6 லட்சம்) பேர் உயிரிழந்த நிலையில், 2021 நவம்பர் தொடக்கத்தில் நாட்டில் 3.2 மில்லியனிலிருந்து 3.7 மில்லியன் வரையிலான மக்கள் கொவிட்-19 பெருந்தொற்றால் இறந்துள்ளனர் என்று ஆய்வு கூறுகிறது.

இதே போன்ற ஊடக செய்திகளுக்கு முன்னர் தெரிவித்தது போல், இந்த செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் முற்றிலும் தவறானவை என்று மீண்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. உண்மைகளின் அடிப்படையில் இல்லாமல், ஊகங்களின் அடிப்படையில் அவை உள்ளன.

கொவிட்-19 இறப்புகள் உள்ளிட்ட உயிரிழப்புகள் குறித்து தகவலளிக்கும் வலுவான அமைப்பு இந்தியாவில் உள்ளது. கிராம பஞ்சாயத்து மட்டத்திலிருந்து தொடங்கி மாவட்ட அளவிலான மற்றும் மாநில அளவிலான வெவ்வேறு நிலைகளில் தரவுகள் தொடர்ந்து தொகுக்கப்படுகின்றன. இறப்புகளைப் பற்றிய அறிக்கை வெளிப்படைத் தன்மையுடன் தொடர்ந்து தயாரிக்கப்படுகிறது. அனைத்து இறப்புகளும் மாநிலங்களால் தகவலளிக்கப்பட்ட பிறகு, மத்திய அரசால் தொகுக்கப்படுகின்றன.

உலகளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகைப்பாட்டின் அடிப்படையில், கோவிட் இறப்புகளை வகைப்படுத்த இந்திய அரசு ஒரு விரிவான வரையறையைக் கொண்டுள்ளது. மாநிலங்களுடன் இது பகிர்ந்து கொள்ளப்பட்டு, மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன. மேலும், கள அளவில் குறிப்பிட்ட சில இறப்புகள் சரியான நேரத்தில் பதிவாகவில்லை என்றால், எண்ணிக்கையை புதுப்பிக்குமாறு இந்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது, எனவே பெருந்தொற்று தொடர்பான இறப்புகளின் சரியான எண்ணிக்கையை பெறுவதில் அரசு முழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

உயிரிழப்புகளை சரியான முறையில் பதிவு செய்ய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. பல்வேறு நிலைகளில் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. எனவே, கொவிட் இறப்புகள் குறைவாகப் பதிவாகியுள்ளன என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்றது மற்றும் நியாயமற்றது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799025

***************



(Release ID: 1799066) Visitor Counter : 258