பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தானே மற்றும் திவாவை இணைக்கும் ரயில்பாதைகளை பிப்ரவரி 18 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்


மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புறநகர் ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைப்பார்

ரூ.620 கோடி செலவில் கட்டப்பட்ட கூடுதல் ரயில் பாதைகள், புறநகர் ரயில் போக்குவரத்துடன் தொலைதூர ரயில் போக்குவரத்தின் குறுக்கீடுகளைக் குறிப்பிடத்தக்க அளவு நீக்கும்

இந்தப் பாதைகள் 36 புதிய புறநகர் ரயில்களின் அறிமுகத்திற்கும் உதவும்

Posted On: 17 FEB 2022 12:42PM by PIB Chennai

தானே மற்றும் திவாவை இணைக்கும் இரண்டு கூடுதல்  ரயில்பாதைகளை பிப்ரவரி 18 அன்று பிற்பகல் 4.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.  மும்பை புறநகர் ரயில்வேயின் இரண்டு புறநகர் ரயில்களையும் கொடியசைத்து அனுப்புவதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுவார்.

மத்திய ரயில்வேயின் முக்கிய சந்திப்பாக கல்யாண் உள்ளது நாட்டின்  வடக்குப் பக்கத்திலிருந்தும், தெற்கு பக்கத்திலிருந்தும் வரும் போக்குவரத்து கல்யாணில் சந்தித்து சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திற்கு (சிஎஸ்எம்டி)  செல்கிறது.  கல்யாண் மற்றும் சிஎஸ்எம்டி இடையேயான இந்த நான்கு பாதைகளில் இரண்டு பாதைகள் மெதுவாக செல்லும் உள்ளூர் ரயில்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் இரண்டு பாதைகள் உள்ளூர் விரைவு, மெயில் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.  புறநகர் மற்றும் தொலைதூர ரயில்களைப் பிரிப்பதற்கு கூடுதலாக இரண்டு பாதைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தானே மற்றும் திவாவை இணைக்கும் இரண்டு கூடுதல் ரயில்பாதைகள் சுமார் ரூ.620 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சிறப்பு அம்சங்களாக 1.4 கிமீ தூர ரயில் மேம்பாலம், 3 பெரிய பாலங்கள், 21 சிறிய பாலங்கள் உள்ளன. மும்பையில் இந்தப் பாதைகள், புறநகர் ரயில் போக்குவரத்துடன் தொலைதூர ரயில் போக்குவரத்தின் குறுக்கீடுகளைக் குறிப்பிடத்தக்க  அளவு நீக்கும். இந்நகரில் இந்தப் பாதைகள்  36 புதிய புறநகர் ரயில்களின் அறிமுகத்திற்கும் உதவும்.

***************


(Release ID: 1799027) Visitor Counter : 264