பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2022 8:55PM by PIB Chennai

அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்  தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது, "அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்ததால் துயரடைந்தேன். நமது  நாட்டுக்கு இவர்கள் ஆற்றிய மகத்தான சேவையை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்." 

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1796765) வருகையாளர் எண்ணிக்கை : 185