நிதி அமைச்சகம்

5ஜி அலைவரிசைக்கான வலுவான சூழல்சார் அமைப்பை கட்டமைக்க பட்ஜெட் 2022-23ல் வடிவமைப்பு அடிப்படையிலான உற்பத்தி திட்டம் முன்மொழியப்பட்டு உள்ளது

Posted On: 01 FEB 2022 1:10PM by PIB Chennai

அடுத்த 25 ஆண்டுகளான அமிர்த காலத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அஸ்திவாரத்தையும் செயல்திட்ட உருவாக்கத்தையும் மத்திய பட்ஜெட் 2022-23 முன்வைத்துள்ளது.  ”2021-22ன் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கு பார்வையின் அடிப்படையை இந்த பட்ஜெட்டும் பின்தொடர்கிறது. நிதிநிலை அறிக்கை மற்றும் நிதிநிலை இருப்பு ஆகியவற்றின் வெளிப்படைத்தன்மை அரசின் நோக்கம், வலிமை மற்றும் சவால்கள் ஆகியவற்றை பட்ஜெட் வெளிப்படுத்துகிறது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொலைதொடர்பியல் துறை:

உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜி அலைவரிசைக்கான வலிமையான சூழல்சார் கட்டமைப்பை உருவாக்க வடிவமைப்பு அடிப்படையிலான உற்பத்தி திட்டம் தொடங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா என்ற குறிக்கோளை அடைவதற்கு 14 தொழில் பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ள உற்பத்தியோடு இணைந்த ஊக்க நடவடிக்கை என்ற திட்டம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளோடு அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது. 5ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கு உதவும் வகையில் அலைவரிசை ஏலம் 2022ல் நடத்தப்படும்.

ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் குறைந்த செலவில் அகன்ற அலைவரிசை மற்றும் மொபைல் சேவைகள் கிடைக்க உதவும் வகையில் அனைவருக்குமான சேவை செயல்பாடுகளுக்கான  நிதியத்தின் கீழ் வருடாந்திர தொகையில் ஐந்து சதவிதம் ஒதுக்கப்படும் என பட்ஜெட் தெரிவிக்கிறது.

நகரப் பகுதிகளைப் போன்றே அனைத்து கிராமங்களிலும் இ-சேவைகள், தொலைதொடர்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 2022-23ல் பொதுத்துறை – தனியார் பங்கேற்பின் மூலம் பாரத் மெட் பெருந்திட்டத்தின் கீழ் ஆப்டிக்கல் ஃபைபர் அமைக்கும் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.

      ****


 



(Release ID: 1794390) Visitor Counter : 265