நிதி அமைச்சகம்
கொவிட் தொற்றுக் காலத்தில் சமூக சேவைகளுக்கான அரசாங்கத்தின் செலவினம் கணிசமாக அதிகரிப்பு
Posted On:
31 JAN 2022 3:04PM by PIB Chennai
கொவிட் தொற்றுக் காலத்தில் சமூக சேவைகளுக்கான அரசாங்கத்தின் செலவினம் கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2021-22 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 2020-21ஐ விட 2021-22இல் சமூக சேவைகள் துறைக்கான செலவின ஒதுக்கீடு 9.8 சதாவிதம் அதிகரித்துள்ளது.
2021-22க்கான பட்ஜெட் மதிப்பீட்டில் மத்திய மாநில அரசுகள் ரூ. 71.61 லட்ச கோடியை சமூக சேவைகள் துறைக்காக ஒதுக்கீடு செய்திருந்தது. கடந்த ஆண்டுகளின் (2020-21) திருத்தப்பட்ட செலவினம் பட்ஜெட் தொகையில் இருந்து ரூ. 54,000 கோடி அதிகரித்துள்ளதாக, பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறைக்கான செலவினம் 2019-20ல் ரூ. 2.73 லட்சம் கோடியாக இருந்தது. இது 2021-22- இல்(பட்ஜெட் மதிப்பீடு), கிட்டத்தட்ட 73 சதவிதம், அதாவது ரூ. 4.72 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது, என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. கல்வித் துறையைப் பொறுத்தவரை, இதே காலகட்டத்தில் 20 சதவிதம் அதிகரித்துள்ளது.
ஆரம்ப நிலைப் பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் மாணவர்களின் விகிதம் 2018-19 இல் உள்ள 4.45 சதவிதத்தில் இருந்து 2019-20 இல் 1.45 சதவிதமாக குறைந்துள்ளது. அதேபோல், 2019-20 ஆம் ஆண்டில் அனைத்து நிலைகளிலும் மொத்தப் பதிவு விகிதத்தில் (GER) முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாலின சமத்துவத்திலும் முன்னேற்றம் வந்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கை குரிப்பிடுகறது. 2019-20ல் 26.45 கோடி குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கொவிட் தொற்றுநோய் கல்வித்துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், 15 முதல் 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் ‘சேர்க்கப்படாத’ குழந்தைகளின் எண்ணிக்கை 2018 இல் 12.1 சதவிதத்தில் இருந்து 2021 இல் 6.6 சதவிதமாக குறைந்துள்ளது, என்று ஆண்டு கல்வி நிலை அறிக்கை- 2021 குறிப்பிடுகிறது.
ஸ்மார்ட் போன்கள் கிடைப்பது 2018 இல் உள்ள 36.5 சதவிதத்தில் இருந்து 2021 இல் 67.6 சதவிதமாக அதிகரித்திருந்தாலும், உயர்நிலை மாணவர்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப மற்றும் நடுநிலை வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி செயல்பாடுகள் கடினமாக உள்ளதாக ஆண்டு கல்வி நிலை அறிக்கை- 2021 கூறுகிறது. குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட் போன்கள் கிடைக்காதது, இணைய நெட்வர்க் இணைப்பு சிக்கல்கள் ஆகியவை குழந்தைகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக உள்ளன. இருப்பினும் ஏறக்குறைய அனைத்து பதிவுசெய்யப்பட்ட (91.9 சதவிதம்) குழந்தைகளுக்கும் அவர்களின் தற்போதைய வகுப்பிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
***************
(Release ID: 1793902)
Visitor Counter : 324