நிதி அமைச்சகம்
2019 ஆம் ஆண்டில் ஜல் ஜீவன் மிஷன் தொடங்கியதில் இருந்து 5.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது.
Posted On:
31 JAN 2022 3:03PM by PIB Chennai
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜல் ஜீவன் திட்டம் தொடங்கியதில் இருந்து 5.5 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2021-22 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள வீடுகள் அனைத்திற்கும் வீட்டுக் குழாய் இணைப்பு மூலம் போதுமான பாதுகாப்பான குடிநீரை வழங்க ஜல் ஜீவன் திட்டம் முயல்கிறது. இதன் மூலம், மேலும் 19 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்கள் அல்லது 90 கோடிக்கும் அதிகமான கிராமப்புற மக்கள் பயனடைவார்கள் என்று கூறினார்.
2019 ஆம் ஆண்டில், கிராமப்புறங்களில் உள்ள சுமார் 18.93 கோடி குடும்பங்களில், சுமார் 3.23 கோடி (17 சதவிகிதம்) கிராமப்புறக் குடும்பங்களுக்கு, வீடுகளில் குழாய் நீர் இணைப்புகள் உள்ளததாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஜனவரி 2, 2022 நிலவரப்படி, ஜல் ஜீவன் திட்டம் தொடங்கியதில் இருந்து 5,51,93,885 வீடுகளுக்கு குழாய் நீர் விநியோக வசதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், நாட்டில் உள்ள 83 மாவட்டங்கள் ‘100 சதவீத வீடுகளுக்கு குழாய் நீர் விநியோகம்’ என்ற நிலையை அடைந்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் (கிராமம்):
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல் 28.12.2021 வரை, இந்தியாவின் கிராமப்புறங்களில் 10.86 கோடிக்கும் அதிகமான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5ன்படி மேம்படுத்தப்பட்ட துப்புரவு வசதியைப் பயன்படுத்தும் வீட்டு மக்கள்தொகை, 2015-16ல் 48.5 சதவீதத்தில் இருந்து 2019-21ல் 70.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
******************
(Release ID: 1793899)