நிதி அமைச்சகம்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 50% கடந்துள்ளது
Posted On:
31 JAN 2022 2:49PM by PIB Chennai
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத்துறையின் பங்களிப்பு 50 சதவீதத்தை கடந்துள்ளதாக 2021-22-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
ஆண்டு தோறும் சேவைத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 10.8 சதவீதமாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் சேவைத் துறையின் ஒட்டு மொத்த வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவைத்துறையின் ஏற்றுமதி, பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 21.6 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
சேவைத்துறையில் அந்நிய நேரடி முதலீடு 16.7 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது, இது நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 54 சதவீதமாகும்.
உலக அளவிலான வர்த்தக ரீதியிலான சேவைத்துறையின் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு கடந்த ஆண்டு 4.1 சதவீதமாக இருந்தது.
2021-22-ம் ஆண்டில் 14,000 புதிய தொழில்கள் தொடங்கப்பட்டதன் மூலம், உலகளவில் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்குவதில் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார்ந்த வர்த்தக சேவைகளுக்கான தொலைத்தொடர்பு விதிமுறைகள் மற்றும் விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் இதில் அடங்கும்.
***************
(Release ID: 1793897)
Visitor Counter : 1349
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam