சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு நிபந்தனை சந்தை அங்கீகாரத்துக்கு தேசிய ஒழுங்குமுறை அமைப்பு அனுமதி

Posted On: 27 JAN 2022 4:17PM by PIB Chennai

இந்திய தலைமை கட்டுப்பாட்டு இயக்குநர் ( டிசிஜிஐஎன்னும் தேசிய ஓழுங்குமுறை அமைப்புகோவாக்சின்கோவிஷீல்ட் ஆகிய இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு சந்தை அங்கீகார அனுமதியை வழங்கியுள்ளதுமத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்குழுவின் பரிந்துரையை ஏற்றுஇந்த தடுப்பூசிகளுக்கு , கட்டுப்படுத்தப்பட்ட அவசரகால பயன்பாட்டு நடைமுறையிலிருந்துவயது வந்தோருக்கு பயன்படுத்தும்  புதிய மருந்து என்னும் மேம்பாட்டு அனுமதி ஜனவரி 19-ந்தேதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் பரிசோதனைகளின் தரவுகளைப்  பகுப்பாய்வு விவரத்துடன் ஆறு மாத காலத்திலோ அல்லது எப்போது கிடைக்கிறதோஎது முன்னதோ அப்போது வழங்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு சந்தை அங்கீகாரம் வழங்கப்படும்.

மேலும்உள்நாட்டில் செலுத்தப்பட்ட தடுப்பூசி பற்றிய விரங்கள் அனைத்தும் கோவின் தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்இதுபற்றிய தரவுகளை ஆறு மாத காலத்திலோ அல்லது எப்போது கிடைக்கிறதோஎது முன்னதோ அப்போது வழங்கவேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு ஆங்கிலச்  செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1792956

-----


(Release ID: 1792991) Visitor Counter : 225