பிரதமர் அலுவலகம்
மேகாலயாவின் ஐம்பதாவது மாநில உருவாக்க தினத்தன்று பிரதமரின் உரை
"இயற்கை, முன்னேற்றம், சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை என்ற செய்தியை மேகாலயா உலகிற்கு வழங்கியுள்ளது"
"திறமைமிக்க கலைஞர்களால் மேகாலயா நிறைந்துள்ளது; ஷில்லாங் சேர்ந்திசை அமைப்பு அதனை புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்கிறது"
"மேகாலயாவின் அபரிமிதமான விளையாட்டுக் கலாச்சாரத்திலிருந்து நாடு புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது"
மேகாலயாவின் சகோதரிகள் மூங்கில் நெசவை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்; அதன் கடின உழைப்பு விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேகாலயாவின் அடையாளமாக்கி வலுப்படுத்துகிறார்கள்"
Posted On:
21 JAN 2022 1:07PM by PIB Chennai
மேகாலயாவின் 50ஆவது மாநில உருவாக்க தினத்தன்று மேகாலயா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த மாநிலம் உருவாவதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் பிரதமரான பின் வடகிழக்குக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான ஷில்லாங் பயணத்தை நினைவு கூர்ந்தார். 3-4 தசாப்தங்கள் இடைவெளிக்குப்பின் இந்த மாநிலத்திற்கு வருகை தந்த முதலாவதாக பிரதமராக அவரின் பயணம் இருந்தது. இயற்கைக்கு நெருக்கமான மக்கள் என்ற நிலையில் அவர்களின் அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் மாநில மக்களை அவர் வெகுவாகப் பாராட்டினார். "இயற்கை, முன்னேற்றம், சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை என்ற செய்தியை மேகாலயா உலகிற்கு வழங்கியுள்ளது" என்று திரு மோடி கூறினார்.
"இனிய இசை மொழியால் தகவல் பரிமாற்றம் செய்யும் கிராமம்", ஒவ்வொரு கிராமத்திலும் சேர்ந்திசை குழுக்கள் என்ற பாரம்பரியங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், கலை மற்றும் இசைத் துறைகளில் இந்த மாநிலத்தின் பங்களிப்புக்கு வணக்கம் தெரிவித்தார். திறமைமிக்க கலைஞர்களால் மேகாலயா நிறைந்துள்ளது; ஷில்லாங் சேர்ந்திசை அமைப்பு அதனை புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்கிறது என்று அவர் கூறினார். மேகாலயாவின் அபரிமிதமான விளையாட்டுக் கலாச்சாரத்திலிருந்து நாடு புதிய நம்பிக்கையைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இயற்கை வேளாண் துறை இந்த மாநிலத்தில் வளர்ந்து வரும் சிறப்பையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். "மேகாலயாவின் சகோதரிகள் மூங்கில் நெசவை மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்; அதன் கடின உழைப்பு விவசாயிகள் இயற்கை வேளாண்மையை மேகாலயாவின் அடையாளமாக்கி வலுப்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினார்.
சிறந்த சாலைகள், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துத் தொடர்புக்கு அரசின் உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த மாநிலத்தின் இயற்கை வேளாண் பொருட்களுக்குப் புதிய உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தையை உத்தரவாதம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. பிரதமரின் கிராம சாலை திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களால் மேகாலயா பயனடைந்துள்ளது. இப்போது ஜல் ஜீவன் இயக்கம் 33 சதவீத வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு தந்துள்ளது. இது 2019ல் வெறும் ஒரு சதவீத வீடுகளாக இருந்தது. தடுப்பூசி கொண்டு செல்வதற்கு ட்ரோன்களைப் பயன்படுத்திய மாநிலங்களில் ஒன்றாக மேகாலயா இருக்கிறது என்ற தகவலையும் பிரதமர் தெரிவித்தார்.
நிறைவாக, மேகாலயா மக்களுக்குத் தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிசெய்த பிரதமர், சுற்றுலா மற்றும் இயற்கை வேளாண் பொருட்களுக்கு அப்பால் புதிய துறைகளின் வளர்ச்சிக்கும் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினார்.
*******
(Release ID: 1791495)
Visitor Counter : 190
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam