பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் ரூ 1500 கோடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 19 JAN 2022 3:40PM by PIB Chennai

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையில் ரூ 1500 கோடி முதலீட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 10,200 பணி-வருடங்கள் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், வருடத்திற்கு சுமார் 7.49 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்கவும் இந்த முதலீடு உதவும். 

இந்திய அரசு, கூடுதலாக ரூ 1500 கோடி முதலீடு செய்வதன் காரணமாக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கீழ்காணும் பலன்களை பெறும்:

1. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு ரூ 12000 கோடி கடன் வழங்க முடியும், இதன் மூலம் 3500-4000 மெகாவாட் கூடுதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திறனுக்கான கடன் தேவை நிறைவு செய்யப்படும்.

2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு பங்காற்றும் வகையில் அத்துறையின் நிகர மதிப்பை அதிகரித்து கூடுதல் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதிவசதி ஏற்படும்..

3. கடன் வழங்கும் மற்றும் கடன் பெறும் செயல்பாடுகளுக்கு வசதியளிக்கும் வகையில், மூலதனத்தையும் ஆபத்தையும்  சரிபார்த்து மதிப்பீடு செய்த  சொத்து விகிதாச்சாரம் மேம்படும்.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மினி ரத்னா (வகை-1) நிறுவனமான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கெனத் தனியாக , வங்கி அல்லாத நிதி நிறுவனமாக, 1987-ல் உருவாக்கப்பட்டது.

34 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்நுட்ப-வணிக நிபுணத்துவம் கொண்ட இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களூக்கான நிதியளிப்பில் முக்கியப்  பங்கு  வகிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1790941

*****


(Release ID: 1790984) Visitor Counter : 400