பிரதமர் அலுவலகம்
தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்துள்ளதைக் குறிக்கும் வகையில் அதனுடன் தொடர்புள்ளவர்களுக்கு பிரதமர் புகழாரம்
தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு
Posted On:
16 JAN 2022 12:31PM by PIB Chennai
தடுப்பூசி இயக்கம் ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையில், அதனுடன் தொடர்புள்ள ஒவ்வொருவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். தடுப்பூசி இயக்கத்தில் பங்காற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் பெரும் வலிமையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மைகவ்இந்தியா டுவிட்டருக்கு பதில் அளித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;
‘’ நாம் இன்று தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டைநிறைவு செய்துள்ளோம்
தடுப்பூசி இயக்கத்தில் தொடர்பு கொண்ட ஒவ்வொருவரையும் நான் வணங்குகிறேன்.
கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் நமது தடுப்பூசி திட்டம் பெரும் வலிமையைச் சேர்த்துள்ளது. உயிர்களைக் காப்பாற்றி, அதன் மூலம் வாழ்வாதாரங்களை பாதுகாத்துள்ளது.
அதேசமயம், நமது மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பிணியாளர்கள் பங்கு அளப்பரியதாகும். தொலைதூரப் பகுதிகளிலும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதையும், நமது சுகாதாரப் பணியாளர்கள் அங்கு அவற்றை எடுத்துச் செல்வதையும் நாம் காண முடிகிறது. நமது இதயமும், மனதும் பெருமிதத்தால் நிறைந்துள்ளது.
பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் அறிவியல் சார்ந்ததாகவே இருக்கும். நமது சக குடிமக்கள் முறையான மருத்துவ கவனம் பெறுவதை உறுதி செய்ய சுகாதார உள்கட்டமைப்பை நாம் அதிகரித்து வருகிறோம்.
கோவிட்-19 தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து, பெருந்தொற்றிலிருந்து மீள்வோம்’’
****
(Release ID: 1790322)
Visitor Counter : 248
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam