பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சூரிய நமஸ்காரம் செய்த 75 லட்சம் பேரை பிரதமர் பாராட்டியுள்ளார்

प्रविष्टि तिथि: 14 JAN 2022 10:15PM by PIB Chennai

உடல் தகுதியோடு இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி

சூரிய நமஸ்காரம் செய்த 75 லட்சம் பேரை பாராட்டியுள்ளார்.

 

இந்தியாவின் தலை சிறந்த விளையாட்டு வீரர்களுடன் இன்று 75 லட்சம் பேர் சூரிய நமஸ்காரம் செய்தது குறித்த இந்திய விளையாட்டுக்கள் ஆணையத்தின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் ட்விட்டரில் பதிவிட்டிருப்பதாவது :

 

"உடல் தகுதியோடு இருப்பதன் முக்கியத்துவத்தையும் நோய்  எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதையும் தற்போதய உலகளாவிய பெருந்தொற்று உறுதி செய்துள்ளது.இது மகத்தான முயற்சியாகும்.

 

அதே சமயம் முகக்கவசங்கள் அணிதல், தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் போன்ற கொவிட் -19 தொடர்பான விதிமுறைகள் அனைத்தையும் நீங்கள் அனைவரும் பின்பற்ற நான் மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறேன்."


(रिलीज़ आईडी: 1790103) आगंतुक पटल : 174
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Marathi , Kannada , Malayalam , Bengali , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia