சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19: கட்டுக்கதைகளும் உண்மையும்


தேர்தல் ஆணையத்தால் 6 ஜனவரி 2022 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள், தவறானவை, அடிப்படையற்றவை & தவறாக வழிநடத்தக்கூடியவை

தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் கொவிட் பரவல் & தடுப்பூசி செலுத்துவது குறித்த நிலவரத்தைத்தான் மத்திய சுகாதார அமைச்சகம், தேர்தல் ஆணையத்திடம் விளக்கியுள்ளது

Posted On: 07 JAN 2022 10:41AM by PIB Chennai

இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று(06.01.2022) நடத்திய கூட்டத்தின்போது, நாட்டின் கொவிட் நிலவரம் கவலைப்படும்படியாக ஏதுமில்லை  மற்றும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், மிகச் சிலருக்கு மட்டுமே ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அச்சமடையக்கூடிய வகையிலோ, கவலைப்படத்தக்க நிலைமையோ இல்லை”  என்று மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை தெரிவித்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுஇதுபோன்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை, தவறாக வழிநடத்தக்வடியவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவைபெருந்தொற்று பாதிப்புக்கு இடையே, தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில், இதுபோன்ற செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன

தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில், நாட்டில் கொவிட் பரவல் மற்றும் ஓமிக்ரன் குறித்த ஒட்டுமொத்த உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலவரத்தைத் தான் மத்திய சுகாதாரத்துறை தேர்தல் ஆணையக் கூட்டத்தில் தெரிவித்தது. கோவிட் பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தவும், நிலைமையை சமாளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்ததநிலை குறித்த நிலவரம் தான் தெரிவிக்கப்பட்டது.   தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாநிலங்களின் நிலவரம் குறித்துத் தான் தெரிவிக்கப்பட்டது.  


(Release ID: 1788234) Visitor Counter : 197