பிரதமர் அலுவலகம்

ஹல்த்வானியில் பல திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 30 DEC 2021 6:31PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

உத்தராகண்ட் ஆளுநர் குர்மித் சிங் ஜி அவர்களே, முதல்வர் திரு. புஷ்கர் சிங் தாமி ஜி அவர்களே, மத்திய அமைச்சர்களே, உத்தராகண்ட் அமைச்சர்களே, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களே, குமாவ் சகோதார, சகோதரிகளே! அனைவருக்கும் வணக்கம்!

நண்பர்களே,

குமாவ்வுடன் எனக்கு நீண்ட கால தொடர்பு உள்ளது.  உத்தராகண்ட் மக்களின் வலிமை, இந்த தசாப்தத்தை  உத்தராகண்டின் தசாப்தமாக மாற்றும்.     உத்தராகண்டின் நவீன உள்கட்டமைப்பு வளர்ந்து வருகிறது,  சார் தாம் திட்டம், புதிய ரயில்பாதைகள் உருவாக்கப்படுவது ஆகியவை இந்த தசாப்தத்தை உத்தராகண்டின் தசாப்தமாக  மாற்றும். புனல்மின் திட்டம், தொழில் சுற்றுலா, இயற்கை வேளாண்மை, சாலை இணைப்பு போன்றவற்றால்  உத்தராகண்ட் வளர்ச்சி அடைந்து வருகிறது.  

மலைப்பிராந்தியங்கள், வளர்ச்சி அடையாமல் வைக்கப்பட்டிருந்தது.  தற்போது அவற்றின் வளர்ச்சிக்காக அயராது  பாடுபட்டு வருகிறோம்.  வளர்ச்சி மற்றும் வசதி இல்லாத காரணத்தால் இந்த பிராந்தியத்திலிருந்து பலர் இடம் பெயர்ந்து சென்றனர். சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற உணர்வுடன் அரசு உழைத்து வருகிறது.    உத்தம்சிங் நகரில் ரிஷிகேஷ் எய்ம்ஸ் துணை மையம்,  பித்தோராகரில் ஜெகஜீவன் ராம் மருத்துவக் கல்லூரி, ஆகியவற்றுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  அவை மாநிலத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும்.  இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் மாநிலத்தின் இணைப்பை மேம்படுத்தும்.  . 

நண்பர்களே,

கடந்த காலத்தின் பற்றாக்குறை மற்றும் இடையூறுகள்  தற்போது வசதிகளாகவும், நல்லிணக்கமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.  கடந்த 7 ஆண்டு காலத்தில் வீடு தோறும் குடிநீர், கழிவறைகள், உஜ்வாலா திட்டம், பிரதமர் அன்ன யோஜனா திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்க்கையில் புதிய வசதிகளும்,  கண்ணியமும் ஏற்பட்டுள்ளது.

அரசு திட்டங்களில் தாமதம் என்பது முந்தைய அரசுகளின் நிரந்தரமான முத்திரையாக இருந்தது.   லக்வார் திட்டம் முதலில் 1976-ல் திட்டமிடப்பட்டது. ஆனால், 46 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது அதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே!

கங்கோத்ரியிலிருந்து கங்கா சாகர் வரையிலான இயக்கத்தில் அரசு ஈடுபட்டுள்ளது.  கழிவறைகள், சிறந்த கழிவுநீர் அகற்றும் திட்டங்கள், நவீன தண்ணீர் சுத்திகரிப்பு வசதிகள் ஆகியவற்றால் கங்கையில் கலக்கும் கழிவுநீர் வெகுவாக குறைந்துள்ளது.  இன்று தில்லி மற்றும் டேராடூனில் உள்ள அரசுகள் அதிகார மோகம் கொண்டவையல்ல, சேவை உணர்வு கொண்டவை.

நண்பர்களே!

எல்லை மாநிலங்களாக இருந்தபோதிலும் பாதுகாப்புத் தொடர்பான தேவைகள் இங்கு புறக்கணிக்கப்பட்டு வந்தன.  தற்போது, ஊடுருவுபவர்கள்  மற்றும் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், தேவையான ஆயுதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உத்தராகண்டில் வளர்ச்சியின் வேகத்தை விரைவுப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது.  மக்களின் ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுவது  எங்களது கடமை.  வளர்ச்சி திட்டங்களுக்காக உங்களுக்கும், உத்தராகண்டிற்கும் மீண்டும் வாழ்த்துக்கள். உத்தராகண்ட் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

மிக்க நன்றி!

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1786377

********



(Release ID: 1787484) Visitor Counter : 173