பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

கங்கா விரைவுச்சாலை மீரட், ஹபூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், புடுவான், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் வழியாக செல்லும்

பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு நாளை நினைவுதினத்தையொட்டி மரியாதை

‘’ கங்கா விரைவுச்சாலை உ.பி.யின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும்’’

‘’ உ.பி முழுவதும் வளரும் போது, நாடும் வளருகிறது. ஆகையால், இரட்டை எஞ்சின் அரசின் கவனம் உ.பி.வளர்ச்சியில் உள்ளது’’

‘’சமுதாயத்தில் விடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு வளர்ச்சியின் பயன்களை கொண்டு சேர்க்க அரசு முன்னுரிமை. அதே உணர்வு வேளாண் கொள்கை மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கையில் பிரதிபலிக்கிறது’’

‘’ உ.பி. பிளஸ் யோகி, சிறந்த உபயோகமாக உள்ளது என உ.பி மக்கள் கூறுகின்றனர்- யுபிஒய்ஓஜிஐ’’

Posted On: 18 DEC 2021 2:48PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் திரு பி எல் வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு திரண்டிருந்தவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், ககோரி சம்பவத்தில் உயிர்த்தியாகம் புரிந்த பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார். உள்ளூர் மொழியில் பேசிய பிரதமர், விடுதலைப் போராட்ட கவிஞர்கள் தாமோதர் ஸ்வரூப் வித்ரோகி, ராஜ்பகதூர் விகால், அக்னிவேஷ் சுக்லா ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.’’ பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு நாளை நினைவுதினம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்த மூன்று ஷாஜஹான்பூர் புதல்வர்கள் டிசம்பர் 19-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் விடுதலைக்காக உயிர் நீத்த இத்தகைய தலைவர்களுக்கு நாம் பெரும் கடன் பட்டுள்ளோம்’’ என்று பிரதமர் தெரிவித்தார்.

கங்கா மாதா அனைத்து புனிதத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஆதாரமாக திகழ்வதாக பிரதமர் தெரிவித்தார். நமது வலிகளை எடுத்துக்கொண்டு, மகிழச்சியை நமக்கு அவர் தருகிறார்.இதேபோல, கங்கா விரைவுச்சாலை உ.பியின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும். இது மாநிலத்தின் ஐந்து வரங்களுக்கு ஆதாரமாக இருக்கும். விரைவுச்சாலைகள், புதிய விமான நிலையங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் மூலம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது ஒரு வரம். இரண்டாவது வரம் வசதிகளை அதிகரித்து, மக்களுக்கு சுலபமான வழிகாட்டுதல். மூன்றாவது வரம் உ.பி.யின் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவது.நான்காவது வரம் உ.பியின் திறன்களை அதிகரிப்பது. ஐந்தாவது வரம் உ.பி.க்கு  அனைத்து விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்துதல்.

உ.பி.யில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்பு, ஆதாரங்கள் எவ்வாறு முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு உதாரணமாகும். அரசுப்  பணம் எவ்வாறு பயன்பட்டது என்பதைக்  கண்டீர்கள். ஆனால், இன்று உ.பி.யின் பணம் வளர்ச்சியல் முதலீடு செய்யப்படுகிறது’’ என்று பிரதமர் கூறினார். உ.பி முழுமையாக  வளரும் போது, நாடும் வளருகிறது. ஆகையால், இரட்டை எஞ்சின் அரசின் கவனம் உ.பி.வளர்ச்சியில் உள்ளது. ‘’ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’’ என்ற மந்திரத்தின்படி, உ.பி.யின் வளர்ச்சிக்கு நாங்கள் உண்மையான முயற்சிகளை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார். பிரதமர் இந்தக் கவனத்தை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எடுத்தார். ‘’ மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர, மற்ற நகரங்கள்,கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை. இரட்டை எஞ்சின் அரசு, உ.பி.யில் 80 லட்சம் இலவச மின்சார இணைப்புகளை அளித்துள்ளதுடன், ஒவ்வொரு மாவட்டமும் முன்பை விட பல மடங்கு அதிகமாக மின்சாரத்தை பெற்று வருகிறது’’ என்று அவர் கூறினார். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளனர். மற்ற பயனாளிகளுக்கும் இது கிடைக்கும் வரை திட்டம் தொடரும். ஷாஜஹான்பூரில் கூட 50 ஆயிரம் பக்கா வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முதல்முறையாக, தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார். ‘’ ’சமுதாயத்தில் விடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு வளர்ச்சியின் பயன்களை கொண்டு சேர்க்க அரசு முன்னுரிமை. அதே உணர்வு வேளாண் கொள்கை மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கையில் பிரதிபலிக்கிறது’’ என்று அவர் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்துக்கான பணிகளுக்கு கெஞ்சும் மனநிலையை விமர்சித்த பிரதமர், அத்தகைய சக்திகள், ஏழைகள் மற்றும் சாதாரண மக்கள் அவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்தார். ‘’ இவர்களுக்கு பாபா விஸ்வநாதர் ஆலய வளாகம் கட்டப்படுவதில் பிரச்சினை. அயோத்தியில் ராமபகவானுக்கு பிரம்மாண்டமான கோயில் அமைக்கப்படுவது பிரச்சினை. கங்கையைத் தூய்மைப்படுத்துவதில் இவர்களுக்கு பிரச்சினை உள்ளது. இவர்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை எதிர்க்கின்றனர். இந்திய விஞ்ஞானிகள் இந்தியாவிலேயே தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை இவர்கள் விமர்சிப்பார்கள்’’ என்று பிரதமர் கூறினார். மோசமான சட்டம் ஒழுங்கு நிலை அண்மைக்காலத்தில் மாறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். ‘’ உ.பி. பிளஸ் யோகி, மிகவும் உபயோகமாக உள்ளது என உ.பி மக்கள் கூறுவதை பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த விரைவுச்சாலையின் பின்னணியில்  நாடு முழுவதும் அதிவிரைவாக இணைக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கின் உந்துதல் உள்ளது. ரூ.36,200 கோடி மதிப்பீட்டில் 594 கி.மீ தூர விரைவுச்சாலை மீரட்டின் பிஜாவுலி கிராமத்தில் துவங்கி, பிரயாக்ராஜின் ஜூதாப்பூர் தந்து கிராமத்திற்கு அருகே வரை நீளும்.  கங்கா விரைவுச்சாலை மீரட், ஹபூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், புடுவான், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் வழியாக செல்லும். ஷாஜஹான்பூரில் 3.5 கி.மீ தூரத்திற்கு இந்திய விமானப்படை விமா னங்கள் னங்கள் தரையிறங்கும் வகையிலும், புறப்படும் வகையிலும் விமான தளம் அமைக்கப்படும். இந்த விச்சாலை வழியே தொழில் வழித்தடச்சாலையும் அமைக்கப்படவுள்ளது.

இந்த விரைவுச்சாலை, தொல் வளர்ச்சி, வர்த்தகம்,வேளாண்மை, சுற்றுலா போன்ற பல்துறை மேம்பாட்டுக்கு வழிகோலும். இந்தப் பிராந்தியத்தில் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிய உந்துசக்தியாக இருக்கும்.

                                                                                *****************



(Release ID: 1783054) Visitor Counter : 206