நித்தி ஆயோக்
தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு குறித்த விளக்க அறிக்கை
தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு : என்எப்எச்எஸ்-4 (2015-16) அடிப்படையிலான அடிப்படை அறிக்கை
Posted On:
27 NOV 2021 9:20AM by PIB Chennai
மத்திய அமைச்சரவை செயலாளரின் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கான உலகளாவியக் குறியீடு (GIRC) முன்முயற்சியின்கீழ், நாட்டின் செயல்திறன், மனித வளர்ச்சிக் குறியீடு(HDI) , உலகளாவிய வறுமைக் குறியீடு(GHI), உலகளாவிய போட்டித்திறன் குறியீடு(GCI), மனித முதலீட்டுக் குறியீடு (HCI), உலகளாவிய புதுமைக் கண்டுபிடிப்புக் குறியீடு(GII) உள்ளிட்ட 29 உலகளாவிய குறியீடுகளாக கண்காணிக்கப்படுகிறது. முக்கியமான சமூக, பொருளாதார மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இதரக் குறியீடுகளைக் கண்காணிப்பதற்கான நடைமுறைக்கு உந்துதல் அளிக்கும் நோக்கிலும், இந்தக் குறியீடுகளைப் பயன்படுத்தி, செயல்திறனை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான கருவியாகப் பயன்படுத்தி, உலகளவிலான இந்தக் குறியீடுகளின் அடிப்படையில் இந்தியாவின் செயல்திறனை வெளிப்படுத்துவதற்காக இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முன்முயற்சியின்கீழ், பலபரிமாண வறுமை அட்டவணை(MPI) தயாரிப்பதற்கான அமைச்சகமாக நித்தி ஆயோக் பொறுப்பு வகிக்கிறது. உலகளாவிய பலபரிமாண வறுமை அட்டவணை-2021ன்படி, 109 நாடுகளின் பட்டியலில் இந்தியா 66-வது இடத்தில் உள்ளது. , உலகளாவிய பலபரிமாண வறுமை அட்டவணையை மறுகட்டமைத்து, உலகளவில் சீரமைக்கப்பட்ட மற்றும் இதுவரை தனிப்பயனாக்கப்படாத இந்தியாவின் பலபரிமாண வறுமை அட்டவணையைத் தயாரித்து, உலகளாவிய பலபரிமாண வறுமை அட்டவணைத் தரவரிசையில் இந்தியாவின் நிலையை மேம்படுத்துவதற்கான இலக்குகளைக் கொண்ட விரிவான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கம். பலபரிமாண வறுமை அட்டவணைக்கான பொறுப்பு வகிக்கும் அமைச்சகம் என்ற முறையில், அட்டவணையை வெளியிடும் அமைப்புகளுடன் தொடர்புகொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் அடிப்படையில் அவற்றைத் தரவரிசைப்படுத்தும் பொறுப்பு நித்தி ஆயோக்கைச் சார்ந்தது என்பதுடன், ஒவ்வொரு பலபரிமாண வறுமை அட்வணைக் குறியீட்டைத் தயாரிப்பது குறித்து ஆலோசிக்க 12 அமைச்சகங்கள் அடங்கிய, அமைச்சகங்களுக்கு இடையிலான பலபரிமாண வறுமை அட்டவணை ஒருங்கிணைப்புக் குழு(MPICC) ஒன்றை அமைக்கும் பொறுப்பும் இதனையே சார்ந்தது ஆகும்.
தேசிய அளவிலான பலபரிமாண வறுமை அட்டவணை : NFHS-4 (2015-16) அடிப்படையிலான அடிப்படை அறிக்கை, 12 அமைச்சகங்களுடன் ஆலோசித்து, மாநில அரசுகள் மற்றும் அட்டவணையை வெளியிடும் அமைப்புகளான ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆக்ஸ்ஃபோர்டு வறுமை மற்றும் மனித வளர்ச்சி அமைப்பு (OPHI) மற்றும் ஐ.நா.வளர்ச்சித் திட்டம்(UNDP) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நித்தி ஆயோக் அமைப்பால் தயாரிக்கப்படுகிறது.
தேசிய பலபரிமாண வறுமை அட்டவணை: 2015-16ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS)-4 ன் அடிப்படையில், அடிப்படை அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின்கீழ் செயல்படும், மக்கள்தொகை அறிவியல்களுக்கான சர்வதேச நிறுவனம்(IIPS)-ஆல் NFHS மேற்கொள்ளப்பட்டது.
தேசிய பலபரிமாண வறுமை அட்டவணை: NFHS-4 (2015-16) அடிப்படையிலான அடிப்படை அறிக்கை, நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு(SDGs) 1.2வை நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான பங்களிப்பு என்பதோடு, “அனைத்து வகையான வறுமையில் வசிக்கும் அனைத்து வயதுடைய ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அளவை குறைந்தது பாதியாகக் குறைப்பதே“ இதன் நோக்கம் ஆகும். சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகிய மூன்று பரிமாணங்களில், ஊட்டச்சத்து, குழந்தை மற்றும் வளரிளம் பருவ இறப்பு, மகப்பேறு கவனிப்பு, பள்ளிக்குச் செல்லும் ஆண்டு, பள்ளிக்கூட வருகை, சமையல் எரிபொருள், துப்புரவு, குடிநீர், மின்சாரம், வீட்டுவசதி, வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களும் அடங்கும்.
NFHS-4 (புள்ளிவிவர காலம் : 2015-16), வீட்டுவசதி, குடிநீர், துப்புரவு, மின்சாரம், சமையல் எரிவாயு, உள்ளார்ந்த நிதிச் சேவை மற்றும் பள்ளிக்கூட வருகையை அதிகரிப்பதற்கான பிற பெரும் முயற்சிகள், ஊட்டச்சத்து, தாய்-சேய் நலம் உள்ளிட்ட முன்னோடித் திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு முற்பட்டது ஆகும். எனவே இது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை பெருமளவில் நிறைவேற்றுவதற்கு முற்பட்ட நிலைமையை மதிப்பிட மிகவும் பயனுள்ள ஆதாரமாக பயன்பட்டது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டம்(PMAY), ஜல் ஜீவன் இயக்கம்(JJM), தூய்மை இந்தியா இயக்கம்(SBM), பிரதமரின் எளிய மக்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கும்(Saubhagya) திட்டம், பிரதமரின் சமையல் எரிவாயு திட்டம்(PMUY) , பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் (PMJDY), ஊட்டச்சத்து இயக்கம் மற்றும் அனைவருக்கும் கல்வி போன்ற சில திட்டங்களை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முன்பிருந்த நிலையை மதிப்பிட அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.
NFHS-ற்காக சேகரிக்கப்பட்ட குடும்ப அளவிலான குறு புள்ளி விவரங்கள், தேசிய அளவிலான பலபரிமாண வறுமை அட்டவணையைத் தயாரிக்க அடிப்படை ஆதாரமாக பயன்பட்டது. பலபரிமாண வறுமைக்கான அடிப்படைக் கருத்தை உருவாக்கி, அதன் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட திட்டங்களை பெரிய அளவில் செயல்படுத்துவதற்கு முந்தைய பலபரிமான வறுமை அட்வணையைத் தயாரிக்க, 2015-16ல் அலகு அளவில் சேகரிக்கப்பட்ட குறு புள்ளிவிவரங்கள், நடப்பு பலபரிமாண வறுமை அட்டவணை அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிப்படை விவரங்கள் அடிப்படையில் நாட்டின் முன்னேற்றம், 2019-20ல் சேகரிக்கப்பட்ட NFHS-5 புள்ளிவிவரங்கள் பயன்படுத்தி மதிப்பிடப்படும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான NFHS-5 2019-20 சுருக்க விவரப் பட்டியல், சர்வதேச மக்கள்தொகை அறிவியல்களுக்கான நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் 24 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 2019-20 புள்ளிவிவர காலத்திற்கான NFHS-5-ஐ ஆதாரமாகக் கொண்ட தேசிய அளவிலான பலபரிமாண வறுமை அட்டவணை, சர்வதேச மக்கள்தொகை அறிவியல்களுக்கான நிறுவனம் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் அடுத்த ஆண்டு வெளியிடப்படும் அலகு அளவிலான குறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும்.
NFHS-5 (2019-20 ) சுருக்க புள்ளிவிவரக் குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட தொடக்க மதிப்பீடுகள் ஊக்கமளிப்பதாக உள்ளது. பற்றாக்குறையைக் குறைத்து, தூய்மையான சமையல் எரிவாயு, துப்புரவு மற்றும் மின்சார வசதிகள் கிடைப்பதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்த மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அத்துடன், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாநில அறிக்கைகள், பள்ளி வருகை, குடிநீர், வங்கிக் கணக்கு வசதி மற்றும் வீட்டுவசதி கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றன. இத்தகைய முன்னேற்றங்கள், NFHS-5 (2019-20 ) வீடுகள் அளவிலான குறு புள்ளிவிவரங்களை ஆதாரமாகக் கொண்ட எதிர்வரும் அட்டவணையில், பலபரிமாண வறுமை கணிசமாகக் குறைந்திருப்பதற்கான ஒட்டுமொத்த திசையைக் குறிக்கிறது.
NFHS-4 (2015-16)க்குப் பிறகு, திட்டமிட்ட தலையீடுகள் மற்றும் முன்னோடித் திட்டங்கள் வாயிலாக பெறப்பட்ட உண்மையான ஆதாயங்கள், NFHS-5 (2019-20) புள்ளிவிவரக் குறிப்புகளில் பிரதிபலிப்பதோடு, தேசிய அளவிலான பலபரிமாண வறுமை அட்டவணை-யின் பார்வையின் கீழ் தெரிவிக்கப்படும் குறியீடுகளைக் குறிக்கிறது. இந்த முன்னேற்ற அறிக்கை, தேசிய அளவிலான பலபரிமாண வறுமை அட்டவணை ஆதாரத்திற்கு பின்தொடர்தலாக அமைவதுடன், 2015-16(NFHS-4) மற்றும் 2019-20 (NFHS-5 ) இடையிலான பலபரிமாண வறுமை குறைந்திருப்பதை எடுத்துக்கொள்ளும். இந்த அறிக்கை, அலகு அளவிலான குறு புள்ளிவிவரம் NFHS-5 கிடைத்த பிறகு வெளியிடப்படும்.
தேசிய பல பரிமான வறுமை குறியீடு(எம்பிஐ) ( தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-4, தரவு காலம் - 2015-16) அடிப்படையிலானது: பரிமாணங்கள், குறிகாட்டிகள் மற்றும் கண்டுபிடிப்புகள்
* இந்தியாவின் தேசிய பல பரிமான வறுமைக் குறியீடு, உடல்நலம், கல்வி மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகிய மூன்று பரிமாணங்களில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பற்றாக்குறையை படம்பிடிக்கிறது. தேசிய எம்பிஐ பரிமாணங்கள், குறியீடுகள் மற்றும் பலன்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
· தேசிய எம்பிஐ எண்ணிக்கை விகிதம் மற்றும் தீவிரத்தின் மதிப்பீடுகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமல்லாமல், மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இது இந்த அறிக்கையின் சிறப்பம்சமாகும். இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகளை மட்டும் பகுப்பாய்வு செய்யாமல், மாநிலங்களின் செயல்பாடுகளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய முடியும். திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்துவதில் மாநில நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பின் அடிப்படையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
2: எண்ணிக்கை விகிதம்: (மக்கள் தொகையில் எம்பிஐ ஏழைகளாக இருக்கும் மக்களின் சதவீதம்)
மாநிலங்கள் அந்தந்த எம்பிஐ எண்ணிக்கை விகிதத்தின் ஏறுவரிசையில் கீழே காட்டப்பட்டுள்ளன:
3: தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு(என்எப்எச்எஸ்) 5-ன் நேர்மறைப் போக்குகள்: தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையின் ஆரம்பகட்ட கண்காணிப்புகள்
· ஊட்டச்சத்து குறியீடுகள், குழந்தை மற்றும் பதின்ம வயதினர் இறப்பு, தாய்மை சுகாதாரம், பள்ளி படிப்பு ஆண்டுகள் மற்றும் இதர விவரங்களை, என்என்எச்எஸ் 5 தரவுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மக்கள் தொகை அறிவியல் சர்வதேச அமைப்பு (ஐஐபிஎஸ்) ஆகியவை வெளியிட்ட பின்பே, கணக்கிட முடியும். ஒவ்வொரு வீட்டிலும், 12 குறியீடுகள் அடிப்படையில் மதிப்பீடு செய்வதன் மூலம் எம்பிஐ மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. எனவே, இதற்கு வீடுகள் அளவிலான தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.
· 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மின்சாரம், சமையல் எரிபொருள், சுகாதார குறியீடுகள் மீதான ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் ஐஐபிஎஸ் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கிடைக்கிறது.
* பள்ளி வருகைப் பதிவேடு, குடிநீர், வீடு, மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான ஆரம்ப கட்ட மதிப்பீடுகள் என்எப்எச்எஸ் 5(2019-20)-ன் மாநில அறிக்கையில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் உள்ளன.
* கீழே உள்ள வரைபடத்தில் உள்ள மஞ்சள் பட்டைகள் 2015-16 (NFHS 4) இல் தேசிய எம்பிஐ-ன் குறிகாட்டியில், தேவையான வசதிகள் இல்லாத மக்கள்தொகையின் சதவீதத்தைக் குறிக்கிறது.
· பச்சைப் பட்டை, 2019-20 NFHS 5) இல் தேசிய எம்பிஐ-ன் குறிகாட்டியில், தேவையான வசதிகள் இல்லாத மக்கள்தொகையின் சதவீதத்தைக் குறிக்கிறது.
* வசதி இல்லாத நிலை = 100 - குறிப்பிட்ட குறிகாட்டியில் சாதனை. உதாரணத்துக்கு, மின்சார இணைப்புடன் கூடிய வீட்டில் வசிக்கும் மக்கள் தொகை 99 சதவீதமாக இருந்தால், வசதி இல்லாத நிலை = 1 சதவீதம்.
a. NFHS 5 (2019-20) -ல் நேர்மறையான போக்கு மின்சார வசதி இல்லாத நிலையைக் குறைப்பது. ( மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20 )
b. NFHS 5 (2019-20)-ல் நேர்மறையான போக்குகள் மேம்படுத்தப்பட்ட மற்றும் பிரத்யேகமான சுகாதாரத்தில் பற்றாக்குறையைக் குறைப்பது. ( மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20 )
c. NFHS 5 (2019-20)-ல் நேர்மறையான போக்குகள் சமையலுக்கு சுத்தமான எரிபொருள் வழங்கிப் பற்றாக்குறையை குறைப்பது. (மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20 )
d. NFHS 5 (2019-20)-ல் நேர்மறையான போக்குகள் குடிநீர் பற்றாக்குறையைக் குறைப்பது .(மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20)
e. NFHS 5 (2019-20)-ல் நேர்மறையான போக்குகள் ஆரம்ப பள்ளிகளில் வருகைப் பதிவு பற்றாக்குறையை குறைப்பது. மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20)
f. NFHS 5 (2019-20)-ல் நேர்மறையான போக்குகள் வங்கி கணக்கு இல்லாத நிலையை குறைத்தல். மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20)
g. NFHS 5 (2019-20)-ல் நேர்மறையான போக்குகள் வீடுகள் பற்றாக்குறையை குறைத்தல். மஞ்சள் பட்டையில் NFHS 4 2015-16 மற்றும் பச்சைப் பட்டையில் NFHS 5 2019-20)
* NFHS-5 வரையறுக்கப்பட்டுள்ளபடி, ஒருவருக்கு வீடு இல்லாத நிலை, அல்லது மக்கள் குடிசை வீட்டில் வசிக்கிறாரார்களா அல்லது ஓரளவு தரமான வீட்டில் வசிக்கிறார்களா என்பதை எம்பிஐ (தேசிய பலபரிமான வறுமைக் குறியீடு) வரையறுக்கிறது.
*********
(Release ID: 1775584)
Visitor Counter : 5573
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam