பிரதமர் அலுவலகம்
மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
23 NOV 2021 3:43PM by PIB Chennai
மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு அவரது பிறந்தநாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நாடாளுமன்ற நடைமுறைகள் குறித்த அவரது மிகச்சிறந்த அறிவு மற்றும் அவையை அவர் நடத்தும் விதம் பெரிதும் மதிக்கப்படுகிறது. நாடாளுமன்ற மாண்பை உயர்த்த குறிப்பிடத்தக்க முயற்சிகளை அவர் எடுத்து வருகிறார். அவரது நீண்ட ஆயுளுக்கு பிரார்த்திக்கிறேன்,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
********
(வெளியீட்டு அடையாள எண்: 1774315)
வருகையாளர் எண்ணிக்கை : 237
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam