பிரதமர் அலுவலகம்

ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 15 NOV 2021 10:17AM by PIB Chennai

எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர், அரங்க ஆளுமையான ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் வரவிருக்கும் தலைமுறைகளைத் தொடர்புபடுத்தியதில் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரேயின் பங்களிப்பை அவர் நினைவு கூர்ந்தார். சில மாதங்களுக்கு முன் அவரது நூற்றாண்டு நிகழ்வில் உரையாற்றியதையும் திரு.மோடி பதிவிட்டுள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“வார்த்தைகளைக் கடந்த வலியுடன் நான் இருக்கிறேன். வரலாறு மற்றும் கலாச்சார உலகில் மறைந்த ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே மிகப் பெரிய வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளார். சத்ரபதி சிவாஜி மகாராஜாவுடன் வரும் தலைமுறைகள் மேலும் இணைப்பைப் பெற்றிருப்பதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரது பிற பணிகளும் நினைவுகூரப்படும்.

அறிவாற்றலும், சிறந்த ஞானமும் கொண்டிருந்த ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே இந்திய வரலாற்றில் வளமான அறிவைப் பெற்றிருந்தார். கடந்த காலங்களில் அவருடன் மிக நெருக்கமாக இருந்து கலந்துரையாடிய பெருமையை நான் பெற்றுள்ளேன். ஒரு சில மாதங்களுக்கு முன் அவரது நூற்றாண்டு நிகழ்வில் உரையாற்றியுள்ளேன்.

விரிவான அவரது பணிகளால் ஷிவ்ஷாகிர் பாபாசாகேப் புரந்தரே நினைவில் வாழ்ந்திருப்பார். இந்த சோகமான தருணத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி.”

 

***



 



(Release ID: 1771889) Visitor Counter : 160