பிரதமர் அலுவலகம்

கிளாஸ்கோவில் சிஓபி-26 உச்சி மாநாட்டில் ‘மீளும் தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை’

Posted On: 02 NOV 2021 8:11PM by PIB Chennai

மாண்புமிகு தலைவர்களே,

  • ‘மீளும் தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு (ஐஆர்ஐஎஸ்) தொடக்கம் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. மிகவும் பாதிக்கப்படும் நாடுகளுக்கு எதையாவது செய்ய வேண்டிய திருப்தியை அளிக்கிறது
  • இதற்காக பேரிடர் மீட்பு, கட்டமைப்புக்கான கூட்டணியை நான் வாழ்த்துகிறேன்.
  • இந்த முக்கியமான அமைப்பில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மொரீஷியஸ், ஜமைக்கா உட்பட அனைத்து நட்பு நாடுகளின் தலைவர்களுக்கும் எனது  மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • இந்த தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ஐநா பொதுச் செயலாளருக்கும் நான் நன்றித் தெரிவிக்கிறேன்.

மாண்புமிகு தலைவர்களே,

  • பருவநிலை மாற்றத்தின் சீற்றத்திற்கு யாரும் தப்பவில்லை என்பதை கடந்த சில சகாப்தங்கள் நிரூபித்துள்ளன. வளர்ந்த நாடுகளாக இருந்தாலும் அல்லது வளமான நாடுகளாக இருந்தாலும் அனைவருக்கும் பருவநிலை மாற்றம் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது.
  • இங்கும் கூட பருவநிலை மாற்றத்தால் மிகப் பெரிய பாதிப்பு ‘வளரும் சிறிய தீவு நாடுகளுக்குத்தான் – SIDS’  இது அவர்களுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. அந்த நாடுகள் நிலைத்திருப்பதற்கே இது சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துகின்றன.
  • பருவநிலை மாற்றம் இது போன்ற நாடுகளின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பொருளாதாரத்திற்கும் சவாலாக இருக்கிறது.
  • இது போன்ற நாடுகள் பெரும்பாலும் சுற்றுலாவைச் சார்ந்தே உள்ளன.  ஆனால் இயற்கை பேரிடர் காரணமாக சுற்றுலாப் பயணிகளும் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

நண்பர்களே,

  • வளரும் சிறு தீவு நாடுகள், பல நூற்றாண்டுகளாக இயற்கையுடன் இணக்கமாக இருந்தாலும், இயற்கை மாற்றத்திற்கு ஏற்ப எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை அறிந்துள்ளனர். கடந்த சில தசாப்தங்களில்  பின்பற்றப்பட்ட சுயநல நடவடிக்கைகள் காரணமாக இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இந்தப் பாதிப்புகளை அப்பாவி சிறு தீவு நாடுகள் இன்று சந்திக்கின்றன.
  • ஆகையால் என்னைப் பொறுத்தவரை சிடிஆர்ஐ  அல்லது மீளும் தீவு நாடுகளுக்கான கட்டமைப்பு. (ஐஆர்எஸ்). வெறும் கட்டமைப்பு விஷயம் மட்டுமல்ல. மனித நலனுக்கான பொறுப்பின் ஒரு அங்கம்.
  • இது மனிதகுலத்திற்கு நமது அனைவரின் கூட்டுப் பொறுப்பு
  • இது ஒரு வழியில் நமது பாவங்களுக்கான ஒரு பரிகாரம்.

நண்பர்களே,

  • பேரிடர் மீட்பு கட்டமைப்புக்கான கூட்டணி, ஒரு கருத்தரங்கிலிருந்து உருவான கற்பனை அல்ல. பல ஆண்டுகளின் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களின் முடிவு காரணமாக ஏற்பட்டது.
  • சிறு தீவு நாடுகளில் சூழ்ந்துள்ள பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலை உணர்ந்து, பசிபிக் தீவு நாடுகள் மற்றும் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்புக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்தியா செய்துள்ளது.
  • சூரிய மின்சக்தித் தொழில்நுட்பங்களில் சிறு தீவு நாடுகளின் மக்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். அங்கு கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தொடர்ந்து பங்களித்துள்ளோம்.
  • அதன் தொடர்ச்சியாக இன்று இந்த தளத்திலிருந்து இந்தியாவிலிருந்து மற்றொரு புதிய நடவடிக்கையை நான் அறிவிக்கிறேன்.
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ வளரும் சிறு தீவு நாடுகளுக்கான சிறப்புத் தரவு வசதியை உருவாக்கும்.
  • இதன் மூலம் வளரும் சிறு தீவு நாடுகள் புயல் எச்சரிக்கை குறித்த தரவுகளை சரியான நேரத்தில் பெறும். பவளப் பாறைகள், கடலோரப்பகுதிகள் செயற்கைக் கோள்கள் மூலம்  தொடர்ந்து கண்காணிக்கப்படும்

நண்பர்களே,

  • ஐஆர்ஐஎஸ் உருவாக சிடிஆர்ஐ மற்றும் எஸ்ஐடிஎஸ் ஆகியவை இணைந்து பணியாற்றியுள்ளது.
  • அதனால் தான் இன்று ஐஆர்ஐஎஸ் தொடக்கத்தை மிக முக்கியமானதாக நான் கருதுகிறேன்
  • ஐஆர்ஐஎஸ் மூலமாக வளரும் சிறு தீவு நாடுகள் தொழில்நுட்பம், நிதி, மற்றும் தேவையான தகவல்களை எளிதாகவும், வேகமாகவும் பெறமுடியும்.  வளரும் சிறு தீவு நாடுகளில் தரமான கட்டமைப்பு வளர்ச்சி, அங்குள்ள மக்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பயன் அளிக்கும்.
  • இந்த நாடுகளைக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடாக உலக நாடுகள் பார்க்கின்றன.  ஆனால் நான் மிகப் பெரிய கடல் வளம் அதிகம் உள்ள நாடுகளாகப் பார்க்கிறேன்.
  • இந்தப் புதிய திட்டத்திற்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும் மற்றும் பேரிடர் மீட்பு கட்டமைப்பு கூட்டணி நாடுகள், இதர நாடுகள் மற்றும் ஐநாவுடன் இணைந்து செயல்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.
  • இந்த புதிய முயற்சிக்காக பேரிடர் மீட்பு கட்டமைப்புக் கூட்டணி மற்றும் சிறு தீவு நாடுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்

-----

 



(Release ID: 1769220) Visitor Counter : 244