பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டுக்கு இடையே, பிரான்ஸ் அதிபர் மற்றும் பிரதமர் இருதரப்பு சந்திப்பு

Posted On: 30 OCT 2021 10:55PM by PIB Chennai

இத்தாலியின் ரோம் நகரில் 2021 அக்டோபர் 30ம் தேதி நடந்த ஜி20 உச்சிமாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் மேதகு திரு இம்மானுவேல் மேக்ரனுடன்  இருதரப்பு கூட்டம் நடத்தினார். 

இந்தியா-பிரான்ஸ் இடையே நிலவும் யுக்திசார்ந்த ஒத்துழைப்புகளின் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். 

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்ததோ-பிசிபிக் யுக்தியை பிரதமர் வரவேற்றார் மற்றும் இதற்காக பிரான்ஸ் முக்கிய பங்காற்றியதற்காக பிரான்ஸ் அதிபருக்கு நன்றி தெரிவித்தார். இந்தோ-பசிபிக் விஷயத்தில் ஒத்துழைப்புடன் செயல்படவும் மற்றும் இப்பகுதியில் தடையற்ற, திறந்தவெளி மற்றும் விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்கை ஏற்படுத்துவதில் புதிய வழிமுறைகளை காணவும்  தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்தனர்.  
நடைபெறவுள்ள சிஓபி26 மாநாடு மற்றும் பருவநிலைக்கான நிதி விஷயங்களின் கவனம் செலுத்துவதன் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர். 

கூடிய விரைவில் இந்தியா வர, பிரான்ஸ் அதிபர்  மேக்ரானுக்கு, பிரதமர் அழைப்பு விடுத்தார். 


(Release ID: 1768205) Visitor Counter : 175