நிதி அமைச்சகம்
மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் , பொது கொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மை சீர்திருத்தங்களுக்கான விதிமுறைகளை வெளியிட்டார்
பொது கொள்முதல் வரம்பில், திட்டங்களை விரைவாகவும், திறனுடனும், வெளிப்படையான முறையிலும் செயல்படுத்த புதுமையான விதிகளை இணைக்கும் முயற்சியாக விதிமுறைகள்
Posted On:
29 OCT 2021 5:17PM by PIB Chennai
மத்திய நிதித்துறை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன், பொது கொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மை சீர்திருத்தங்களுக்கான விதிமுறைகளை இன்று வெளியிட்டார். மாண்புமிகு பிரதமர் இந்த ஆண்டு தமது சுதந்திர நாள் உரையில் குறிப்பிட்டபடி, தற்போது உள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளை ஆய்வு செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக, இந்த விதிமுறைகள் வெளியிடப்படுகின்றன. 2021 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 முடிய சிறப்பு இயக்கமாக அமைச்சரவை செயலாளரால் இது கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு துறைகளின், பொது கொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மை தொடர்பான நிபுணர்களுடன் நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் கீழ், இந்த வரைவு விதிமுறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சகத்தின் செலவுகள் துறை, அமைச்சகங்கள்/துறைகளின் கருத்துக்கள் மற்றும் வேண்டுகோள்கள் பற்றி விரிவான ஆலோசனைக்குப் பின்னர், விதிமுறைகளை வெளியிட நியமிக்கப்பட்டுள்ளது.
பொது கொள்முதல் வரம்பில், திட்டங்களை விரைவாகவும், திறனுடனும், வெளிப்படையான முறையிலும் செயல்படுத்த, புதுமையான விதிகளை இணைக்கவும், பொதுமக்களின் நலனை உத்தேசித்து, மேலும் செயல் திறனுடனும், விரைவாகவும் முடிவுகளை எடுக்க திட்டங்களை செயல்படுத்தும் முகமைகளுக்கு அதிகாரமளிக்கவும், இந்த விதிமுறைகள் முனைகிறது. பாக்கி தவணைகளை செலுத்துவதற்கான கடுமையான காலவரம்பு நிர்ணயித்தல் உள்ளிட்ட சில மேம்பாட்டு அம்சங்கள் இதில் உள்ளன. ஒப்பந்ததாரர்களுக்கு குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பணப்புழக்கத்தை மேம்படுத்த, தற்காலிக தொகைகளை ( பில்லில் குறிப்பிடப்பட்ட தொகையில் 70% அல்லது அதற்கும் மேல்) உரிய நேரத்தில் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் டிஜிடல் முன்னெடுப்பு முனைப்பின் ஒரு பகுதியாக, மின்னணு அளவீட்டு நூல்கள், பணியின் முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் வழிவகைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இதர ஐடி அடிப்படையிலான தீர்வுகளுடன், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள இந்த நடைமுறை, ஒப்பந்ததாரர்களின் பில் தொகைகளை விரைவாக விடுவிக்கவும், அதன் மூலம் தாவாக்களை குறைக்கவும் வகை செய்யும், செயல் திறன் மிக்க டிஜிடல் இந்தியா என்னும் கனவை நனவாக்க உதவும்.
ஒப்பந்ததாரர்களைத் தேர்வு செய்யும் மாற்று முறைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால், திட்டங்களைச் செயல்படுத்துவதில், செயல்திறனும், வேகமும் முன்னேற்றம் பெறும். பாரம்பரிய எல்1 முறைக்குப் பதிலாக, தரம் மற்றும் செலவு அடிப்படையிலான தேர்வு மூலம், குறிப்பிட்ட நேர்வுகளில், வெளிப்படையாகவும், நியாயமான முறையிலும், கருத்துறு மதிப்பீட்டின் போது, சிறப்பு மதிப்பு வழங்கும் தர அளவுகோல்களை மேற்கொள்ள முடியும்.
பொது திட்டங்களை உரிய நேரத்திலும், அனுமதிக்கப்பட்ட செலவுக்குள்ளும், நல்ல தரத்துடனும் செயல்படுத்துவது எப்போதும் சவாலாக இருந்து வருகிறது. பொருளாதார மேம்பாட்டின் வேகம் உயரும் போது, தேவையற்ற இடையூறுகளை அகற்றுவதை உறுதி செய்வதுடன், பொது மக்கள் பணத்தின் மதிப்பு உயருவதற்கு புதிய கண்டுபிடிப்புகளை பயன்படுத்தவும், நடைமுறைகள் மற்றும் விதிகளை கவனமாக ஆய்வு செய்வது அவசியமாகும்.
பொது கொள்முதல் மற்றும் திட்ட மேலாண்மையின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி, மத்திய கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) , தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி), நிதி ஆயோக் ஆகியவை விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டு, பொது கொள்முதலில் தற்போதும், வருங்காலத்திலும் சவால்களை எதிர்கொள்ளும் உத்திகளில் மாற்றங்களை மேற்கொள்வது பற்றி ஆலோசனை வழங்கியுள்ளன.
https://doe.gov.in/divisions/general-instructions-procurement-and-project-management
*******
(Release ID: 1767588)
Visitor Counter : 277
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam