பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

டென்மார்க் பிரதமர் வருகையின் போது பரிமாறிக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் / ஒப்பந்தங்களின் பட்டியல்

Posted On: 09 OCT 2021 3:23PM by PIB Chennai
வ. எண் புரிந்துணர்வு ஒப்பந்தம் / ஒப்பந்தத்தின் பெயர் இந்தியத்தரப்பில் பரிமாறிக்கொண்டவர் டென்மார்க்தரப்பில் பரிமாறிக்கொண்டவர்
1 நிலத்தடி நீர் வளங்கள் மற்றும் நீர்நிலைகளை வரைபடமாக்குவது பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஹைதராபாத்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்(சிஎஸ்ஐஆர்)- தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டென்மார்க் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம், மற்றும் டென்மார்க், கிரீன்லாந்தின் புவியியல் ஆய்வு அமைப்பு ஆகியவை இடையே கையெழுத்தானது.

டாக்டர் வி.எம். திவாரி

இயக்குனர்

சிஎஸ்ஐஆர்- தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஹைதராபாத் (தெலங்கானா)

டென்மார்க் தூதர் ஃப்ரெடி ஸ்வானே
2 பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக அணுகல் குறித்த ஒப்பந்தம் சிஎஸ்ஐஆர் மற்றும் டென்மார்க் காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகம் இடையே கையெழுத்தானது

டாக்டர் விஷ்வஜனனி  ஜெ.சதிகெரி

தலைவர்

சிஎஸ்ஐஆர் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக பிரிவு, புதுதில்லி
டென்மார்க் தூதர் ஃப்ரெடி ஸ்வானே
3 கோடை காலங்களில்  இயற்கை குளிர்பதன சீர்மிகு மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம், டான்ஃபோஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இடையே கையெழுத்தானது.

பேராசிரியர் கோவிந்தன் ரங்கராஜன்

இயக்குனர்

இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு

திரு ரவிச்சந்திரன் புருசோத்தமன்

தலைவர்

டான்ஃபோஸ் இந்தியா
4 இந்தியா-டென்மார்க் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகங்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

திரு ராஜேஷ் அகர்வால்

செயலாளர்

திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம்
டென்மார்க் தூதர் ஃப்ரெடி ஸ்வானே

இது தவிர கீழ்கண்ட வர்த்தக ஒப்பந்தங்களும் அறிவிக்கப்பட்டன:

 

ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசர் உருவாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவில் ஹைட்ரஜன் எலக்ட்ரோலைசரின் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ஸ்டைஸ்டால் எரிபொருள் டெக்னாலஜிஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட ‘நிலைத்தன்மையின் தீர்வுகளுக்கான சீர்மிகு மையத்தை’ அமைக்க,  இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஆர்ஹஸ் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம். 
தீர்வுகளுக்கான அறிவுப் பகிர்தலை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதாரத்தின் பசுமை மாற்றம் குறித்த ஆராய்ச்சியை எளிதாக்குதல் பற்றி 'அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன்' மற்றும் 'ஸ்டேட் ஆஃப் கிரீன்' ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

 


(Release ID: 1762452) Visitor Counter : 297