பிரதமர் அலுவலகம்
மத்தியப்பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் அக்டோபர் 6 அன்று பிரதமர் கலந்துரையாடவுள்ளார்
1.7 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் வழங்கவிருக்கிறார்
Posted On:
05 OCT 2021 2:44PM by PIB Chennai
மத்தியப்பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டப் பயனாளிகளுடன் அக்டோபர் 6 அன்று 12.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுவார். இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின்கீழ் 1,71,300 பயனாளிகளுக்கு இ-சொத்து அட்டைகளையும் பிரதமர் வழங்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் மத்தியப்பிரதேச முதலமைச்சரும் பங்கேற்பார்.
ஸ்வமித்வா திட்டம் பற்றி
ஸ்வமித்வா என்பது பஞ்சாயத்ராஜ் அமைச்சகத்தின் மத்திய திட்டமாகும். இது கிராமப்பகுதிகளில் வாழ்கின்றவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டது. நகர்ப்புறங்களில் உள்ளது போல கிராமத்தில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கும் இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலச்சொத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு மறுவரையறை செய்வதையும் இது நோக்கமாக கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இந்த திட்டம் ஊக்கப்படுத்தும்.
•••
(Release ID: 1761090)
Visitor Counter : 516
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam