பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜப்பானின் புதிய பிரதமர் மேன்மை தங்கிய கிஷிதா ஃபியுமியோவுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2021 4:43PM by PIB Chennai

ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மேன்மை தங்கிய கிஷிதா ஃபியுமியோவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘ஜப்பானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மேன்மை தங்கிய கிஷிதா ஃபியுமியோவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா – ஜப்பான் இடையேயான சிறப்பு உத்திகள் மற்றும் உலகளாவிய கூட்டுறவை வலுப்படுத்தவும், நமது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் அமைதி மற்றும் வளத்தை மேம்படுத்தவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர் நோக்கியிருப்பதாகவும் பிரதமர் திரு.நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

***

 


(வெளியீட்டு அடையாள எண்: 1760829) வருகையாளர் எண்ணிக்கை : 305