உள்துறை அமைச்சகம்
எஸ்எஸ்ஜி படையின் கார் பேரணி:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்
Posted On:
01 OCT 2021 3:36PM by PIB Chennai
சுதந்திர இந்தியாவின் வைர விழாவை முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு படையின் (என்எஸ்ஜி) ‘சுதர்ஸன் பாரத் பரிக்கிரமா’ என்ற கார் பேரணியை தில்லி செங்கோட்டையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா நாளை தொடங்கி வைக்கிறார்.
அதோடு, தண்டி, வடகிழக்கு பகுதி, லே முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் பல பகுதிகளில் இருந்து புறப்பட்ட மத்திய ஆயுதப்படைகளின் சைக்கிள் பேரணியையும் அவர் தில்லியில் நாளை கொடியசைத்து வரவேற்று முடித்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற திரு நீரஜ் சோப்ரா, திரு ரவி குமார் தஹியா, திரு பஜ்ரங் புனியா ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். மத்திய அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு மத்திய ஆயுத படைகளின் சைக்கிள் பேரணி நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. அதிகாரிகள், வீரர்கள் என 900 பேர், 21 மாநிலங்களில் 41,000 கி.மீ. பயணம் செய்து தில்லியை அடைகின்றனர்.
இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், ஒரு சைக்கிள் பேரணியும், மத்திய ரிசர்வ் காவல் படையினர் 4 சைக்கிள் பேரணிகளும், சாஸ்திர சீமா பால் படையினர் 10 சைக்கிள் பேரணிகளையும், அசாம் ரைபில்ஸ் படையினர் ஒரு சைக்கிள் பேரணியையும், மத்திய தொழில் பாதுகாப்புபடையினர் 9 சைக்கிள் பேரணிகளையும், எல்லை பாதுகாப்பு படையினர் 15 சைக்கிள் பேரணிகளையும் நடத்துகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759954
*****************
(Release ID: 1760027)
Visitor Counter : 286