உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில பேரிடர் நிவாரண நிதிக்கான மத்திய பங்களிப்பின் 2-வது தவணையை விடுவிக்க மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்

प्रविष्टि तिथि: 01 OCT 2021 1:08PM by PIB Chennai

மாநில பேரிடர் நிவாரண நிதியத்தின் கீழ், நிதியுதவி வழங்குவதற்கான அம்சங்கள் மற்றும் விதிமுறைகளில் திருத்தம் செய்து மத்திய அரசு 25.09.2021 அன்று உத்தரவிட்டுள்ளது. கொவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு உதவித் தொகை வழங்க இந்த திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 30.06.2021 அன்று பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை நடைமுறைப்படுத்த, மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கான நெறிமுறைகளை வகுக்க இந்தத் திருத்தம் வகை செய்துள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கான மத்திய பங்களிப்பின் 2-வது தவணையாக, 23 மாநிலங்களுக்கு 7,274.40 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிதியையும் சேர்த்து மாநிலங்களின் பங்களிப்பு உட்பட 2021-22 ஆம் நிதியாண்டில் மாநில அரசுகளிடம் ரூ.23,186.40 கோடி மாநில பேரிடர் நிதியாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொவிட்-19 பாதிப்பு மற்றும் அறிவிக்கப்பட்ட சீற்றங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான செலவை மாநில பேரிடர் நிவாரண நிதியங்கள் ஈடுகட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1759909

•••••

(Release ID: 1759909)


(रिलीज़ आईडी: 1759947) आगंतुक पटल : 315
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam