பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்


ராஜஸ்தானில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 29 SEP 2021 12:50PM by PIB Chennai

ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைப்பார். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, சிரோஹி, ஹனுமன்கர் மற்றும் தௌசா ஆகிய மாவட்டங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.

மாவட்டம்/ பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த புதிய மருத்துவ கல்லூரிகளின் உருவாக்கம்என்ற மத்திய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை நிறுவுவதற்கு தகுதி குறைந்த, பின்தங்கிய மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. திட்டத்தின் மூன்று கட்டங்களின் கீழ் நாடு முழுவதும் 157 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிபெட் பற்றி:

ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைந்து  ஜெய்ப்பூரில் சிபெட்: பெட்ரோ ரசாயனங்கள் தொழில்நுட்ப நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. சுய நிலையான இந்த நிறுவனம், பெட்ரோ ரசாயணம் மற்றும் அது சம்பந்தப்பட்ட துறைகளின் தேவையை முழு ஈடுபாட்டுடன் நிறைவேற்றி வருகிறது. திறன் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களாக இளைஞர்கள் உருவாவதற்கு ஏற்ற கல்வியை இந்த நிறுவனம் அளிக்கும்.

மத்திய அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

                                                                                                                                            -----  



(Release ID: 1759232) Visitor Counter : 291