பாதுகாப்பு அமைச்சகம்
குடும்ப ஓய்வூதியத்தை பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன் பிறந்தோரின் வருமான வரம்பு உயர்வு
Posted On:
28 SEP 2021 3:01PM by PIB Chennai
குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும், மன நலம் குன்றிய அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள்/ உடன்பிறந்தவர்களின் வருவாய் வரம்பை மேம்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இதுபோன்ற குழந்தை/ உடன் பிறந்தவரது ஒட்டுமொத்த வருமானம் (குடும்ப ஓய்வூதியம் தவிர்த்த ஆதாரங்களின் மூலம்) சாதாரண விகிதத்திலான குடும்ப ஓய்வூதியத்தை விட குறைவாக இருந்தால், (அதாவது உயிரிழந்த அரசு ஊழியர்/ ஓய்வூதியதாரர் கடைசியாக பெற்ற தொகையில் 30 சதவிகிதமும், அகவிலைப்படியும்) வாழ்நாள் முழுவதும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.
08.02.2021 முதல் இந்த நிதி உதவி அமலுக்கு வரும். தற்போது மாதந்தோறும் ரூ. 9000க்குள் வருமானமும் அகவிலைப்படியும் பெரும் மாற்றுத்திறனாளி குழந்தை/ உடன்பிறந்தோர் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1758906
(Release ID: 1759012)
Visitor Counter : 775