பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா-அமெரிக்க இருதரப்பு சந்திப்பில் பிரதமரின் தொடக்க குறிப்புகள்

Posted On: 25 SEP 2021 4:36AM by PIB Chennai

முதலில், எனக்கு மட்டுமல்ல, எனது தூதுக்குழுவினருக்கும் நட்பு நிறைந்த இந்த அன்பான வரவேற்பை தந்த அமெரிக்க அதிபருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மரியாதைக்குரிய அதிபருடன், 2016 லும், அதற்கு முன்னதாக 2014 ல் கூட, விரிவாக விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளுக்கு உங்கள் பார்வையை வகுத்திருந்தீர்கள், நீங்கள் அதை மிக விரிவாக விளக்கியிருந்தீர்கள், உண்மையில் அது ஒரு உத்வேகம் தரும் பார்வை. இன்று அமெரிக்காவின் அதிபராக, நீங்கள் தீவிரமான முன்முயற்சி எடுத்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, அந்த தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, நீங்கள் இந்தியாவில் பைடன் குடும்பப்பெயரைப் பற்றி விரிவாகப் விளக்கியிருக்கிறீர்கள் / பேசியிருக்கிறீர்கள், உண்மையில் நீங்கள் அதை என்னிடம் முன்பே குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் என்னிடம் அதை குறிப்பிட்ட பிறகு நான் ஆவணங்களை தீவிரமாக தேடினேன், இன்று நான் சில ஆவணங்களைக் கொண்டு வந்துள்ளேன். இதனால் ஒருவேளை இந்த விஷயத்தை எங்களால் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்பதுடன் அந்த ஆவணங்கள் உங்களுக்கும் பயன்படலாம்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, இன்று உங்களது உச்சி மாநாட்டு பேச்சு மற்றும் உச்சி மாநாட்டு சந்திப்பில், இது 21 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தம் என நான் உறுதியாக நம்புகிறேன், இது மூன்றாவது தசாப்தத்தின் முதல் வருடம், நான் இந்த முழு தசாப்தத்திலும் பார்க்கும்போது, உங்கள் தலைமையில், இந்திய-அமெரிக்க உறவுகள் விரிவடையவும், உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும், இது ஒரு மாற்றமான காலமாகவும் இருக்கப்போகிறது என்பதையும் நான் காண்கிறேன். என்னால் அதை நன்றாக பார்க்க முடிகிறது, நன்றி!

இந்த மாற்றமடையும் காலம் இந்திய-அமெரிக்க உறவுகளில் இருப்பதை பார்க்கும் போது, மரபுகளைப் பற்றி பேசும்போது, நமது இரு நாடுகளும் உறுதியாக இருக்கும் ஜனநாயக மரபுகள், ஜனநாயக மதிப்புகள், மரபுகள் ஆகியவை பற்றி பேசுகிறேன், இந்த மரபுகளின் முக்கியத்துவத்தையும் மேலும் இது அதிகரிக்கும் என்பதையும் காண்கிறேன்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே இதேபோல, 4 மில்லியனுக்கும் அதிகமான இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்காவின் முன்னேற்றப் பயணத்தில் பங்கேற்பதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். இந்த தசாப்தத்தின் முக்கியத்துவத்தையும், இந்திய – அமெரிக்கர்கள் திறமையால் ஆற்றப்படும் பங்கையும் நான் பார்க்கும்போது, இந்த ஒவ்வொரு நபர்களிடமும் உள்ள திறமை அதிக பங்கு வகிப்பதையும், இந்திய மக்களின் திறமைகள் இந்த உறவில் இணைந்து இருப்பதையும், இதில் உங்கள் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது என்பதையும் நான் காண்கிறேன்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, இதே போன்று, இன்று உலகின் மிக முக்கியமான முதுகெலும்பாக தொழில்நுட்பம் இருப்பதுடன், அந்த தொழில்நுட்பமும் மக்கள் சேவைக்காகவும் மனிதகுலத்தின் பயன்பாட்டிற்காகவும் இருக்கும். இதற்கான வாய்ப்புகள் மிகப்பெரியதாக இருப்பதை நான் காண்கிறேன்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே இதேபோல், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், வர்த்தகம் தொடர்ந்து முக்கியத்துவம் பெறுகிறது, மேலும் நமது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் உண்மையில் நிறைவை உண்டாக்குவதைக் காண்கிறோம். உங்களிடம் சில விஷயங்கள் உள்ளன, எங்களிடம் சில விஷயங்கள் உள்ளன, உண்மையில் அதனை பரிவர்த்தனைகள் மூலம் ஒருவருக்கொருவர் பூர்த்தி செய்கிறோம். இந்த தசாப்தத்தில் வர்த்தகத் துறையில், அதுவும் மிக முக்கியமானதாக இருப்பதை நான் காண்கிறேன்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுவதை பற்றி கூறினீர்கள், மகாத்மா காந்தி இந்த புவியில் கொள்கை நம்பிக்கையை பற்றியே எப்போதும் பேசுவார். அந்த வகையில் மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, இந்த தசாப்தம் அந்த கொள்கை நம்பிக்கையில் முக்கியமானதாக இருக்கும்.

இதன் பொருள் நம்மிடம் உள்ள இந்த புவியை, எதிர்வரும் தலைமுறையினருக்கு நாம் அப்படியே கொடுக்க வேண்டும் அந்த வகையில் இந்த கொள்கை நம்பிக்கை உலகளவில் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது, ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளுக்கும் மகாத்மாவின் இந்த இலட்சியங்கள், பூமியின் கொள்கை நம்பிக்கைகள் நிறைவேற உலகளாவிய குடிமக்களின் பொறுப்பு அதிகரிக்கும் என்று காந்தி பேசினார்.

மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, நீங்கள் மிக முக்கியமான பிரச்சினைகளை குறிப்பிட்டுள்ளீர்கள், அத்துடன் அமெரிக்காவின் அதிபராக  பொறுப்பேற்ற பிறகு, கோவிட் 19 நெருக்கடி, காலநிலை மாற்றம் அல்லது குவாட் மாநாடாக இருந்தாலும் அனைத்திற்கும் மிகவும் தனித்துவமான முயற்சிகளை முன்னெடுத்துள்ளீர்கள். அத்துடன் உங்கள் பார்வையை செயல்படுத்துவதற்கும் பெரும் முயற்சி எடுத்துள்ளீர்கள். இன்று இந்த பிரச்சினைகள் அனைத்தையும் விரிவாக விவாதிக்க எங்களுக்கு இந்த வாய்ப்பு உள்ளது.

ங்களின் இந்த விவாதங்களுக்குப் பிறகு, அந்தந்த நாடுகளுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாம் எவ்வாறு ஒன்றாகச் செயல்பட முடியும் என்பதையும், நாம் நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்பதையும் உணர்த்துவோம், உங்கள் தலைமையின் கீழ் நாங்கள் என்ன செய்தாலும் அது நிச்சயம் முழு உலகிற்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரியாதைக்குரிய அதிபர் அவர்களே, மீண்டும் இந்த அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி!

மறுப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டுள்ளது.

**************


(Release ID: 1758077) Visitor Counter : 279