சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 SEP 2021 10:34AM by PIB Chennai
நாள் ஒன்றில் மிக அதிகமாக கடந்த 24 மணி நேரத்தில் 2.5 கோடி கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.02%.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,40,639 ஆகும்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.65%.
கடந்த 24 மணி நேரத்தில் 33,798 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,26,32,222 பேர் குணமடைந்துள்ளனர்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (2.02%) 85 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் (2.46%) 19 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.07 கோடியாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755965
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1756025)
வருகையாளர் எண்ணிக்கை : 205
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam