நித்தி ஆயோக்
‘இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ பற்றிய அறிக்கையை வெளியிடுகிறது நிதி ஆயோக்
Posted On:
15 SEP 2021 1:45PM by PIB Chennai
‘இந்தியாவில் நகர்ப்புற திட்டமிடல் திறனில் சீர்திருத்தங்கள்’ பற்றிய அறிக்கையை, நிதி ஆயோக், நாளை (செப்டம்பர் 16) வெளியிடுகிறது
இந்த அறிக்கை. நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் ஆகியோரால், நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் மற்றும் சிறப்பு செயலாளர் டாக்டர் கே.ராஜேஸ்வர ராவ் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் செயலாளர்கள் முன்னிலையில் வெளியிடப்படும்.
சுகாதாரமான நகரங்களைத் திட்டமிடுதல், நகர்ப்புற நிலத்தின் உகந்த பயன்பாடு, மனித வள திறன்களை அதிகரித்தல், நகர்ப்புற நிர்வாகத்தை வலுப்படுத்துதல், உள்ளூர் தலைமையை உருவாக்குதல், தனியார் துறையின் பங்கை மேம்படுத்துதல் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் கல்வி முறையை மேம்படுத்துதல் ஆகியவை உட்பட நகர்ப்புற திட்டமிடல் குறித்த பல அம்சங்களின் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755015
----
(Release ID: 1755083)