பிரதமர் அலுவலகம்

பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் பேட்மிண்டன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் பாராட்டு

Posted On: 04 SEP 2021 5:24PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

பிரமோத் பகத், ஒட்டுமொத்த நாட்டின் மனங்களை வென்றுள்ளார். தலைசிறந்த வீரரான அவரது வெற்றி, லட்சக் கணக்கானோருக்கு எழுச்சியூட்டும். போற்றத்தக்க நெகிழ்தன்மை மற்றும் அர்ப்பணிப்பை அவர் வெளிப்படுத்தினார். பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்.

*****************(Release ID: 1752042) Visitor Counter : 194