பிரதமர் அலுவலகம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பத்திரிகையாளருமான திரு. சந்தன் மித்ராவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2021 9:32AM by PIB Chennai
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பத்திரிகையாளருமான திரு. சந்தன் மித்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் அவர் என்றும் நம் நினைவில் இருப்பார் என்று பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர் தனது டுவிட்டரில்;
“திரு. சந்தன் மித்ரா அவர்கள் தனது அறிவாற்றல் மற்றும் நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம் என்றும் நம் நினைவில் வாழ்வார். அவர் அரசியல் மற்றும் ஊடக உலகில் புகழ் பெற்று விளங்கியவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம்சாந்தி”, என்று பிரதமர் கூறியுள்ளார்.
****
(வெளியீட்டு அடையாள எண்: 1751302)
வருகையாளர் எண்ணிக்கை : 298
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam