சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா ஆய்வு
Posted On:
01 SEP 2021 6:21PM by PIB Chennai
நாட்டில் கொவிட்-19 தொடர்பான அத்தியாவசிய மருந்துகளின் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் போதுமான அளவில் இருப்பது ஆய்வின் போது தெரிய வந்தது. இம்மருந்துகளுக்கான மூலப்பொருட்களும் போதுமான அளவில் இருப்பில் உள்ளன.
எட்டு முக்கிய மருந்துகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. அவை வருமாறு:
1. டோசிலிசுமாப்
2. மெத்தைல் பிரெடினிசோலோன்
3. எனாக்சோபிரின்
4. டெக்சாமெதாசோன்
5. ரெம்டெசிவிர்
6. அம்போடெரிசின் பி டிஆக்சிகோலேட்
7. போசாகோனசோல்
8. இன்ட்ராவெனஸ் இம்யூனோகுளோபிளின் (ஐவிஐஜி)
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751150
-----
(Release ID: 1751226)
Visitor Counter : 201