ஆயுஷ்
‘விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின்’ ஒரு பகுதியாக யோகா கைபேசிch செயலியை ஏழு மத்திய அமைச்சர்கள் நாளை அறிமுகப்படுத்துகின்றனர்
Posted On:
31 AUG 2021 6:09PM by PIB Chennai
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக இந்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள ‘விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின்’ ஒரு பகுதியாக, ‘Y Break’ எனும் யோகா கைபேசிச் செயலியை ஆறு மத்திய அமைச்சர்களுடன் இணைந்து மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் விக்யான் பவனில் நாளை (2021 செப்டம்பர் 1) நடைபெறவுள்ள வண்ணமயமான நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தவுள்ளார்.
ஆகஸ்ட் 30 தொடங்கி செப்டம்பர் 5 வரை ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஆயுஷ் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு மன்சுக் லக்ஸ்மண்பாய் மாண்டவியா, சட்டம் மற்றும் நீதி அமைச்சர் திரு கிரன் ரிஜிஜு, தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல், பணியாளர் மற்றும் பயிற்சி மற்றும் பிரதமர் அலுவலகம் இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரம் அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி மற்றும் மத்திய ஆயுஷ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் டாக்டர் முஞ்சப்பாரா மகேந்திரபாய் காலுபாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பணியிடங்களில் தனிநபர்களின் செயல்திறனை அதிகரிக்கும் விதத்தில் பல்வேறு பயனுள்ள யோகா செயல்முறைகளை இந்த ஐந்து நிமிட யோகா இடைவெளி கொண்டுள்ளது. அவர்களது மன அழுத்தத்தைப் போக்கி, புத்துணர்ச்சி அளித்து, பணியில் சிறப்பான முறையில் கவனம் செலுத்த இது உதவுகிறது.
உலகெங்கும் உள்ள பணியாளர்களுக்கு பலனளிக்கும் வகையில், தலைசிறந்த நிபுணர்களால் கவனத்துடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தடாசனா-உர்த்வா-ஹஸ்தோட்டனாசனா-தடாசனா, ஸ்கந்த சக்ரா-உத்தநாமண்டுகாசனா-கடி சக்ராசனா, அர்தசக்ராசனா, பிரசரித பதோட்டனாசனா-மூச்சை ஆழமாக இழுத்து விடுதல், நதிசோதனா பிரணாயாமா, பிரமாரி பிராணாயாமா-தியானம் ஆகிய சில எளிமையான யோகா செயல்முறைகளைக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750800
----
(Release ID: 1750925)
Visitor Counter : 244