பிரதமர் அலுவலகம்
பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவிற்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
31 AUG 2021 12:17PM by PIB Chennai
டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சிங்ராஜ் அதானாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,
“சிங்ராஜ் அதானாவின் அசாதாரணமான செயல்திறன்! இந்தியாவின் திறமை மிக்க துப்பாக்கிச் சுடும் வீரர், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் வெண்கலப் பதக்கத்தை நாட்டிற்கு வழங்குகிறார். மிகக்கடுமையாக உழைத்து, பாராட்டத்தக்க வெற்றியை அவர் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துகள், எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1750698)
आगंतुक पटल : 243
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada