பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2021 5:39PM by PIB Chennai

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற சுமித் அந்திலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் நமது தடகள வீரர்கள் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறார்கள்! பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் சாதனை படைத்த சுமித் அந்திலால் நாடு பெருமை கொள்கிறது.

மதிப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற சுமித்துக்கு வாழ்த்துகள். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்”, என்று குறிப்பிட்டுள்ளார்.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1750497) வருகையாளர் எண்ணிக்கை : 298