தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

‘அரசியலமைப்பு உருவாக்கம்’ பற்றிய மின்னணு-புகைப்பட கண்காட்சி மற்றும் ‘75ம் ஆண்டில் சித்ராஞ்சலி’ என்ற மெய்நிகர் திரைப்பட போஸ்டர்: மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Posted On: 27 AUG 2021 4:05PM by PIB Chennai

அரசியலமைப்பு உருவாக்கம்பற்றிய மின்னணு-புகைப்பட கண்காட்சி மற்றும் ‘75ம் ஆண்டில் சித்ராஞ்சலிஎன்ற  மெய்நிகர் திரைப்பட போஸ்டரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி ஆகியோர் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெஹ்வல், கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லெகி ஆகியோருடன் இணைந்து தொடங்கி வைத்தனர். 

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாட, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் கொண்டாடும் ஐகானிக் வாரத்தின்ஒரு பகுதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. புதிய இந்தியாவின் பயணம், அதிகம் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை கொண்டாடுவதும் தான் இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அனுராக் தாகூர், மின்னணு-புகைப்பட கண்காட்சியின் நோக்கம், அரசியல் அமைப்பு உருவாக்கத்தை மக்களுக்கு தெரிவிப்பதுதான் என கூறினார். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை பரப்பும்  முயற்சியில் இளைஞர்களை ஊக்குவிக்க, உங்கள் அரசியல் சாசனத்தை அறிந்து கொள்ளுங்கள் என்ற நிகழ்ச்சியை மத்திய அரசு விரைவில் நடத்தும் என அமைச்சர் திரு அனுராக் தாகூர் அறிவித்தார்.

மெய்நிகர் போஸ்டர் கண்காட்சி குறித்து பேசிய மத்திய அமைச்சர், ‘‘சித்ராஞ்சலி 75, இந்திய சினிமாவின் 75வது ஆண்டை குறிக்கிறது எனவும், இது நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், சமூக சீர்திருத்தவாதிகளின்  புனிதமான நினைவுகள், நமது வீரர்களின் தைரியம் ஆகியவற்றை நிச்சயம் தூண்டும்’’ என கூறினார்.

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை விரிவாக நடத்துவதற்காக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு மத்திய அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி நன்றி தெரிவித்தார். அம்ரித் மகோத்ஸவம் அரசு நிகழ்ச்சியாக இல்லாமல், மக்கள் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது நமது பிரதமரின் தொலை நோக்கு என அவர் கூறினார்.

மின்னணு தொகுப்பை இந்த இணைப்பில் https://constitution-of-india.in/ காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749558

*****************



(Release ID: 1749651) Visitor Counter : 178