பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை அறிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2021 11:15PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பதாவது:
‘‘ புல்தானா மாவட்டத்தில் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் வேதனையடைந்தேன். உறவினர்களை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயம் அடைந்தோருக்கு ரூ.50,000, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்: பிரதமர் மோடி’’
************
(வெளியீட்டு அடையாள எண்: 1748070)
வருகையாளர் எண்ணிக்கை : 208
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam