சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 88.13 லட்சம் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா மாபெரும் சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 17 AUG 2021 1:18PM by PIB Chennai

மாபெரும் சாதனையாக, இந்தியா நேற்று சுமார் 88 லட்சம் (88,13,919) கொவிட்-19 தடுப்பூசிகளைச் செலுத்தியது.  

தற்போதைய கட்ட தடுப்பூசித் திட்டத்தை, மாண்புமிகு பிரதமர் கடந்த ஜூன் 7ஆம் தேதி அறிவித்த போது, அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், தகுதியான அனைவரையும், கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊக்குவிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்தற்போதைய சாதனை, கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மத்திய அரசு மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் வேகத்தை அதிகரிக்கவும், விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதிகளவிலான தடுப்பூசிகள் கிடைப்பதன் மூலம், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நன்கு திட்டமிடுவதற்காகவும்தடுப்பூசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கிடைக்கும் தடுப்பூசி நிலவரங்கள் 15 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கப்படுகின்றன.

88.13 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தியன் மூலம், மொத்தம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 55.47 கோடியாக  (55,47,30,609) அதிகரித்துள்ளதுஇதன் மூலம் வயது வந்த 46 சதவீதம் இந்தியர்கள் முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். 13 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டு கொவிட்-19க்கு எதிரான பாதுகாப்பை பெற்றுள்ளனர்

------


(வெளியீட்டு அடையாள எண்: 1746679) வருகையாளர் எண்ணிக்கை : 257