பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ரோக்லாவில் நடைபெற்ற உலக இளைஞர் வில்வித்தைப் போட்டியில் பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 15 AUG 2021 10:30PM by PIB Chennai

ரோக்லாவில் நடைபெற்ற உலக இளைஞர் வில்வித்தைப் போட்டியில், 8 தங்கம் உட்பட 15 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது;

“ரோக்லாவில் நடைபெற்ற உலக இளைஞர் வில்வித்தைப் போட்டியில், 8 தங்கம் உட்பட 15 பதக்கங்களை வென்று இந்தியக் குழுவினர் நமக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். நமது குழுவினருக்கு வாழ்த்துகள். அவர்களது வருங்கால முயற்சிகள் சிறக்கவும் எனது நல்வாழ்த்துகள். அவர்களது இந்த வெற்றியானது, நமது இளைஞர்கள் இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்குவதற்கு ஊக்கமளிக்கும்”.

 

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1746276) வருகையாளர் எண்ணிக்கை : 238