பிரதமர் அலுவலகம்

தற்சார்பு பெண்சக்திகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் ஆகஸ்ட் 12ம் தேதி பங்கேற்பு

Posted On: 11 AUG 2021 1:14PM by PIB Chennai

தற்சார்பு பெண்சக்திகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுவினர்கள் / தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின்  (DAY-NRLM) கீழ் உருவாக்கப்பட்ட சமுதாய சேவையாளர்கள்  ஆகியோருடன்ஆகஸ்ட் 12-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் காணொலி  மூலம் கலந்துரையாடுகிறார்.

இந்நிகழ்ச்சியில், நாடு முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினரின் வெற்றி கதைகளின் தொகுப்பு மற்றும்  விவசாய வாழ்வாதாரங்கள் குறித்த கையேடு ஆகியவையும் பிரதமரால் வெளியிடப்படும்.  

4 லட்சத்துக்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1625 கோடி அளவில் மூலதன நிதி உதவியையும் பிரதமர் விடுவிக்கிறார்மேலும்உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகத்தின், பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் ( PMFME), சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடியை முதலீட்டு பணமாகவும் மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின்  கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும்  பிரதமர் விடுவிக்கிறார்

மத்திய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்  அமைச்சர் திரு கிரிராஜ் சிங்; மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் திரு பசுபதி குமார் பரஸ்; ஊரக மேம்பாட்டு இணையமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் திரு ஃபகன் சிங் குலாஸ்தே, பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு கபில் மொரேஸ்வர் பாட்டீல் மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் படேல்  ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

 தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (DAY-NRLM) பற்றி:

கிராமப்புற ஏழை குடும்பங்களை, படிப்படியாக   சுய உதவி குழுக்களாக மாற்றுவதையும்  மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்களை பன்முகப்படுத்தவும், அவர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் நீண்டகால ஆதரவு  வழங்குவதை தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.   இத்திட்டத்தின் பெரும்பாலான செயல்பாடுகள், சுயஉதவிக் குழுவினரால் அமல்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது.

இவர்கள் வேளாண் சேவை அளிப்பவர்கள், கால்நடை சேவை அளிப்பவர்கள், வங்கி சேவை அளிப்பவர்கள், காப்பீடு சேவை அளிப்பவர்கள்வங்கி தொடர்பாளர் சேவை  அளிப்பவர்கள் போன்ற சமுதாய சேவையாளர்களாக பயிற்சி பெற்றுள்ளனர்குடும்ப வன்முறை, பெண்கள் கல்வி மற்றும் இதர பாலினம் தொடர்பான பிரச்சினைகள்ஊட்டச்சத்து, துப்புரவு, சுகாதாரம் போன்ற விஷயங்களில் விழிப்புணர்வு உருவாக்கம் மற்றும் நடத்தை மாற்ற தகவல்தொடர்பு மூலம்  சுய உதவிக் குழு பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் இத்திட்டம்  செயல்படுகிறது

*****



(Release ID: 1744773) Visitor Counter : 748