பிரதமர் அலுவலகம்

ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் பாலாஜி தம்பேயின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

प्रविष्टि तिथि: 11 AUG 2021 10:21AM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, ஆயுர்வேத பயிற்சியாளரும், யோகா நிபுணரான டாக்டர் பாலாஜி தம்பேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “டாக்டர் பாலாஜி தம்பே, ஆயுர்வேதத்தை உலகளவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக்குவதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகளுக்காக நினைவு கூரப்படுவார். பரிவு மிக்க பண்புக்காக அவர் போற்றப்பட்டார். அவரது மறைவால் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று கூறியுள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1744693) आगंतुक पटल : 259
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam