பிரதமர் அலுவலகம்
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாட்டு பிரதமர் ரால்ப் கோன்சால்வ்ஸ் மீதான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
प्रविष्टि तिथि:
09 AUG 2021 9:58AM by PIB Chennai
செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாட்டு பிரதமர் ரால்ப் கோன்சால்வ்ஸ் மீதான கொடூரமான தாக்குதலுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் விரைவில் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாட்டு பிரதமர் ரால்ப் கோன்சால்வ்ஸ் மீதான கொடூரமான தாக்குதலுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். மேன்மைமிகு பிரதமரே, நீங்கள் விரைவில் குணமடையவும், ஆரோக்கியம் பெறவும் நான் வாழ்த்துகிறேன். இன்று நடைபெற உள்ள கடல்சார் பாதுகாப்பு குறித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொது விவாதத்தில் உங்கள் பங்கேற்பை நாங்கள் இழப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1743931)
आगंतुक पटल : 240
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam